அக்டோபர்- 14. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், வேதியியலாளர்-அய்மே ஆர்கண்ட் (Aime Argand) மறைந்த தினம்.
இன்ற நினைவு நாள்:- அக்டோபர்- 14.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், வேதியியலாளர்-அய்மே ஆர்கண்ட் (Aime Argand) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜூலை-05, 1750 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் பிறந்தார். பிறகு படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால்,
புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது 20 வ து வயதில் காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார்.
வைனிலிருந்து பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர் தனது சகோதரருடன் இணைந்து வடிசாலைஒன்றை அமைத்தார்.
கண்டுபிடிப்புகள்:-
ஆர்கண்ட் விளக்கு (Argand lamp) 1780 ஆம் ஆண்டில் கண்டுபிடித்து, உரிமம்பெற்றார். இது மற்ற எண்ணெய் விளக்கு விட அதிக ஒளியை
கொடுத்தது.
ஆர்கண்ட் விளக்கு (Argand lamp)அமைப்பு:-
இது சுமார் 6-10 மெழுகுதிரிகள் வழங்கக்கூடிய ஒளியை வழங்கியது. இது வட்டவடிவில் அமைந்த திரியைக் கொண்டது. இது ஒன்றினுள் இன்னொன்றாக அமைந்த இரண்டு உலோக உருளைகளுக்கு இடையில் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், திரியின் நடுப்பகுதி ஊடாகவும், வெளிப்புறத்திலும் வளி சென்று வரக்கூடியதாக இருந்தது. அக்காலத்து முறையில் தேய்த்துச் செய்யப்பட்ட
கண்ணாடி உருளை ஒன்றினால் திரி பக்கங்களில் மூடப்பட்டிருந்தது. இது சுவாலையை
உறுதியாக எரியும்படி செய்ததுடன், சுவாலையைச் சுற்றிய காற்றோட்டத்தையும் மேம்படுத்தியது.
இவ் விளக்கில் திமிங்கில எண்ணெய் போன்ற நீர்ம எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. தனியான கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த எண்ணெய் திரிக்கு வழங்கப்பட்டது. இவ்விளக்கின் வடிவமைப்பு கூடுதலான ஒளியைக் கொடுத்தது ஒருபுறம் இருக்க, எண்ணெயும், திரியும் முழு எரிதலுக்கு உள்ளாவதால் அடிக்கடி திரியை வெட்டிச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை.
1850 ஆம் ஆண்டுகள் வரை இவ் விளக்கே எல்லோராலும் விரும்பப்பட்டது. 1850 ஆம் ஆண்டளவில், தட்டையான திரியும், நடுவில் பருத்த அமைப்பும் கொண்ட கண்ணாடி உருளைகளுடன் கூடிய மண்ணெய் விளக்குகள் அறிமுகமாயின. மண்ணெய், திமிங்கில எண்ணெயை விடக் குறிப்பிடத்தக்க அளவு மலிவாக இருந்தது. இதனால் புழக்கத்தில் இருந்த ஆர்கண்ட் விளக்குகள் கூட மண்ணெயைப் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன.
மறைவு:-
அக்டோபர்-14, 1803 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.


No comments: