அக்டோபர்-15. KINDLY ORGANIZE GLOBAL HAND WASHING DAY ACTIVITIES IN YOUR SCHOOLS:-
KINDLY ORGANIZE GLOBAL HAND WASHING DAY ACTIVITIES IN YOUR SCHOOLS:-
எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
👉🏻மலம் கழித்த பின்பு
👉🏻சாப்பிடுவதற்கு முன்
👉🏻சமைப்பதற்கு முன்
👉🏻உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன்
👉🏻உணவு பரிமாறுவதற்கு முன்
👉🏻குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின்
👉🏻வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும்
👉🏻கழிப்பறைகளை சுத்தம் செய்தபின்
👉🏻\மருத்துவமனை சென்று வந்த பின்
👉🏻அசுத்தமான இடங்களில் கை வைத்த பின்
கை கழுவும் முறைகள்:-
🙌🏻வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை.
🙌🏻விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும்
🙌🏻நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
🙌🏻கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும்..
உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
🖐🏻விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்.
🖐🏻வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும்.
🖐🏻கைகளில் சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் .
👏🏻பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்.
👏🏻குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்.
விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
இத்துடனுள்ள படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.


No comments: