அக்டோபர்-16. உலக உணவு நாள் பற்றி அறிவோம்:-
இன்று:- அக்டோபர்-16.
உலக உணவு நாள்:-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-16 ஆம் நாளன்று உலக நாடுகளில்
உணவு நாள்
கொண்டாடப்படுகிறது.
1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டும், தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
திட்டமிடல் அவசியம்:-
இயற்கை வளங்களை வைத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.
உணவு பதார்த்தங்களை வீணடிக்காமல், சிக்கனத்தை கையாள வேண்டும்.
விவசாயப் பொருட்களை அறுவடை செய்வதும், அவற்றை சேமிப்பது, 'பேக்கிங்' செய்வது, வாகனம் மூலம் கொண்டு செல்வது, உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதி போன்றவற்றில் சரியான திட்டமிடலை ஏற்படுத்த வேண்டும்.
2030 இல் ஜீரோ ஹங்கர்:-
வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.


No comments: