Breaking

அக்டோபர்-16. கணினிச் செய்திகளை இணைக்கும் வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தை கொடுத்தவர்- ஜொனாதன் ப்ரூஸ் போஸ்டல் (Jonathan Bruce Postel) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- அக்டோபர்-16.

கணினிச் செய்திகளை இணைக்கும் 
வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தை
கொடுத்தவர்-
ஜொனாதன் ப்ரூஸ் போஸ்டல்
(Jonathan Bruce Postel) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஆகஸ்ட்-06, 1943 ஆம் ஆண்டு,
அல்டடேனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.

போஸ்டல் வான் ந்யூஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
 பின்னர் UCLA வில் இடம் பெற்று,  B.S. 1966 ஆம் ஆண்டு முடித்தார்.
பிறகு M.A. 1968 இல் முடித்து, பிறகு பொறியியல் முடித்தார். பின்னர் அவர் தனது Ph.D. 1974 இல் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி  பட்டயப் படிப்பு ஆராய்ச்சி பொறியாளராக  UCLA இல்    ARPANET ஆக பணியாற்றினார்.

ஆகஸ்ட் 24, 1973 வரை MITER கார்ப்பரேஷனில் பணியாற்றினார். 

 மார்ச் 1977 இல், அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தகவல் விஞ்ஞான நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணிபுரிந்தார்.


கண்டுபிடிப்புகள்:-

இயற்பியல் படித்து கணினி இனையதளத்தை வடிவமைப்பதில் சிறப்பாக செயல்பட்டு வடிவமைத்தவர் ஆவார்.

உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்கும் வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தை
கொடுத்தார். முக்கியமாக இவர் கொடுக்கும் தகவலை பதில் அளிப்பது என்ற அமைப்பில் கண்டுபிடித்தார். 

இறப்பு:-

அமெரிக்க கணினி அறிவியல் மேதையாக கருதப்பட்ட இவர்,
அக்டோபர்-16, 1998 ஆம் ஆண்டு
சாண்டா மோனிகா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

இண்டர்நேஷனல் சொசைட்டி இன் போஸ்டல் விருது இவரை சிறப்பிக்கும் விதத்தில் பெயரிடப்பட்டது.
 தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தகவல் அறிவியல் நிலையத்தில் உள்ள போஸ்டல் மையம் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.