Breaking

அக்டோபர்-16. சுகாயெவ் நீக்கல் வினை கண்டுபிடித்தவர்- இலெவ் அலெக்சாந்திரோவிச் சுகாயெவ் (Lev Aleksandrovich Chugaev) பிறந்த தினம்.



இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-16.

சுகாயெவ் நீக்கல் வினை கண்டுபிடித்தவர்-
இலெவ் அலெக்சாந்திரோவிச் சுகாயெவ் (Lev Aleksandrovich Chugaev) பிறந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர்- 16, 1873 ஆம் ஆண்டு
மாஸ்கோ, உருசியாவில் பிறந்தார்.
1881 இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1896 முதல் 1904 வரை அவர் மாஸ்கோவின் நுண்ணுயிரியல் துறையின் வேதியியல் பிரிவின் தலைவராக இருந்தார்.

பணிகள்:-

மாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக 1904 முதல் 1908 வரை; மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிசில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்த அதே வேளையில், 1908 முதல் 1922 வரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (பின்னர் லெனின்கிராட்) பல்கலைக்கழகத்தில் உள்ள கனிம வேதியியல் பேராசிரியராக பணியாற்றினார்.மெண்டலீவுக்கு அடுத்து செயிண்ட் பீட்டர்சுபெர்க் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசியராகப் பணியாற்றியது இவரது வாழ்வின் மிகச்சிறந்த பணியாகும். 
கனிம வேதியியல், குறிப்பாக அப்பிரிவில் 
பிளாட்டினம் தொகுதி அணைவுச் சேர்மங்கள் மற்றும் கரிம வேதியியல் பிரிவுகளில் இவர் ஆர்வமுடையவராக இருந்தார்.

கண்டுபிடிப்புகள்:-

இரு மெத்தில்கிளையாக்சைம் என்ற சேர்மம், நிக்கல்(II) அயனிகளுடன் சேர்ந்து செஞ்சிவப்பு நிறத் திண்மமாக மாறுகிறது என்று சுகாயெவ் கண்டறிந்தார். இவ்வினையே  உலோகங்களைக் கண்டறிவதற்கான முதல் சிற்றிட ஆய்வாகும். ஆல்பிரட் வெர்னரின் விதிகளையொட்டி இவர் பிளாட்டினம் தொடர்பு வேதியியலுக்காக பல்வேறு வகையான பங்களிப்புகளை அளித்துள்ளார். குளோரோபெண்டமின் பிளாட்டினம்(IV) அயனியை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள [Pt(NH3)5Cl]Cl3 உப்பானது 
சுகாயெவ் உப்பு என்றழைக்கப்படுகிறது. இவருடைய ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பிற அணைவுச் சேர்மங்கள் [Pt(SEt2)4][PtCl4], [Pt(NH3)5OH]Cl3, [Os(SC(NH2)2)6Cl3.H2O என்பனவாகும்.

ஐதரசீன் சேர்மத்தின் அணைவுச் சேர்மங்களைக் குறித்தும் சுகாயெவ் ஆய்வுகள் மேற்கொண்டார். சுகாயெவ் உப்பு என்றழைக்கப்படும் அணைவு உப்பு பிளாட்டினம்(II) உப்புகள் மீத்தைல் ஐசோசயனைடு மற்றும் ஐதரசீனுடன் வினைபுரிவதால் உண்டாகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சேர்மங்கள் கார்பீன் அணைவுச் சேர்மங்கள் எனக் கூறப்பட்டன. அநேகமாக முதல் உலோக கார்பீன் அணைவுச் சேர்மம் இதுவாகக்கூட இருக்கலாம்.

ஒற்றை டெர்ப்பீன், துசீன் ஆகியவை தொடர்பான ஆய்வின் போது சுகாயெவ் நீக்கல் வினையை இவர் கண்டறிந்தார்.

இறப்பு:-

லியோ அலெக்சாண்ட்ரோவிக் திசுகாயெஃப் அல்லது திசுகாயெவ் என்றும் அழைக்கப்பட்ட இவர்,
செப்டம்பர்-26, 1922 ஆம் ஆண்டு,
க்ரியாசொவெத்சு, உருசியாவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.