Home
OCTOBER
அக்டோபர்-19. ஆல்பா மற்றும் பீட்டா கதிரியக்கம் கண்டுபிடித்தவர், அணுக்கரு (ரூதர்ஃபோர்ட் மாதிரி), ரூதர்ஃபோர்ட் சிதறல், புரோட்டான் கண்டுபிடிப்பாளர்-எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) மறைந்த தினம்.
அக்டோபர்-19. ஆல்பா மற்றும் பீட்டா கதிரியக்கம் கண்டுபிடித்தவர், அணுக்கரு (ரூதர்ஃபோர்ட் மாதிரி), ரூதர்ஃபோர்ட் சிதறல், புரோட்டான் கண்டுபிடிப்பாளர்-எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) மறைந்த தினம்.
05:49
Read
இன்று நினைவு நாள்:- அக்டோபர்-19.
ஆல்பா மற்றும் பீட்டா கதிரியக்கம் கண்டுபிடித்தவர், அணுக்கரு (ரூதர்ஃபோர்ட் மாதிரி), ரூதர்ஃபோர்ட் சிதறல், புரோட்டான் கண்டுபிடிப்பாளர்-எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஆகஸ்ட்-30, 1871 ஆம் ஆண்டு
பிரைட்வாட்டர், நியூசிலாந்தில்
பிறந்தார். தொடக்கக் கல்வியை கவேலோக் பள்ளியில் பயின்றார். நெல்சன் கல்லூரி, நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கேன்டர்பரி கல்லூரியில் பயின்றார். பிறகு BA, MA, B.SC., பயின்று பட்டங்களைப் பெற்றார். உதவித்தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தும், பிரபல விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சனின் மாணவரானார். மேலும், ட்ரினிட்டி கல்லூரியில் ஆய்வு மாணவராக சேர்ந்து 1897 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
கனடாவின் மான்ட்ரீல் நகரில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராக பணியாற்றினார்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக பதவி வகித்தார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட இயக்குநராக கடைசிவரை பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் அல்லாத 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். மூன்றாவதாக
காமா கதிர்களையும் கண்டறிந்தார்.
மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கினார்.
வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
கதிரியக்கத்தின் மிக முக்கிய அம்சமான எரியாற்றல் குறித்தும் ஆராய்ந்தார். இது, வேதியியல் வினைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றலை விட அதிகம் என்று நிரூபித்தார். இதன்மூலம் அணு ஆற்றல் கோட்பாட்டை உருவாக்கினார்.
மேலும்,அரை ஆயுள் (11½ நிமிடங்கள்)
என்ற முக்கிய கோட்பாட்டை வகுத்ததால், கதிரியக்கக் காலக் கணிப்புக்கு (Radioactive dating) வழிவகுத்தது. இது புவியியல், தொல்பொருளியல், வானியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் இது இன்றும் புவி புவயியல் துறைகளில் பயன்படுகிறது.
விருதுகள்:-
ரம்ஃபோர்ட் பதக்கம்-1904,
கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1908 இல் வேதியியலுக்கான நோபல் பரிசு,
பர்னார்டு மெடல் -1910,
எலியட் க்ரஸன் பதக்கம்-1910,
மேட்டூசி மெடல் -1913,
கோப்ளி மெடல் -1922,
ஃப்ராங்க்லின் மெடல்-1924,
ஆல்பர்ட் மெடல் -1928,
ஃபாரடே மெடல் -1930,
வில்ஹெல்ம் எண்டர்டர் மெடல் -1936, போன்றவற்றை பெற்றார்.
இறப்பு:-
நியூசிலாந்தில் பிறந்த, பிரிட்டிஷ் இயற்பியலாளர், அணு இயற்பியல் தந்தை,
நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியலாளரான இவர், அக்டோபர்-19, 1937 இல் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
அணுக் கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள், அணுக் கட்டமைப்பு குறித்த கோட்பாடுகள் அனைத்தும்,
இன்றளவும் அடித்தளமாக விளங்குகின்றன.
அக்டோபர்-19. ஆல்பா மற்றும் பீட்டா கதிரியக்கம் கண்டுபிடித்தவர், அணுக்கரு (ரூதர்ஃபோர்ட் மாதிரி), ரூதர்ஃபோர்ட் சிதறல், புரோட்டான் கண்டுபிடிப்பாளர்-எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
05:49
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
05:49
Rating: 5
Tags :
OCTOBER


No comments: