Home
இந்திய அறிவியல் அறிஞர்கள்
அக்டோபர்-19. சந்திரசேகர் எல்லை, சந்திரசேகர் உராய்வு, சந்திரசேகர் துருவமுனைப்பு, சந்திரசேகர்-கெண்டல் செயல்பாடு கண்டுபிடித்த அறிவியல் ஆராய்ச்சியாளர்- சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) பிறந்த தினம்.
அக்டோபர்-19. சந்திரசேகர் எல்லை, சந்திரசேகர் உராய்வு, சந்திரசேகர் துருவமுனைப்பு, சந்திரசேகர்-கெண்டல் செயல்பாடு கண்டுபிடித்த அறிவியல் ஆராய்ச்சியாளர்- சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) பிறந்த தினம்.
05:41
Read
இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-19.
சந்திரசேகர் எல்லை,
சந்திரசேகர் உராய்வு,
சந்திரசேகர் துருவமுனைப்பு,
சந்திரசேகர்-கெண்டல் செயல்பாடு கண்டுபிடித்த அறிவியல் ஆராய்ச்சியாளர்-
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) பிறந்த தினம்.
பிறப்பு:-
பாகிஸ்தானின் லாகூர் நகரில், அக்டோபர்-19, 1910 ஆம் ஆண்டு பிறந்தார். பிறகு, குடும்பம் சென்னையில் குடியேறி, வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் 1922 முதல் 25 வரை
படித்தார். மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் 1925 முதல் 1930 வரை பயின்று பட்டம் பெற்றார்.
1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று,
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து, 1933-ல் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியின் இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகின.
கண்டுபிடிப்புகள்:-
பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது.
ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ எனப்படுகிறது.
மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
கட்டுரை:-
பல நூல்களைப் படித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆராய்ச்சிகள் குறித்த முதல் கட்டுரையை 1929 ஆண்டு, The Compton Scattering and the New Statistics"
வெளியிட்டார்.
நூல்கள்:-
ஸ்டெல்லர் அமைப்பு ஒரு அறிமுகம்
ஸ்டெல்லர் டைனமிக்ஸ் கோட்பாடுகள்.
விருதுகள்:-
விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும்
1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கோப்லி விருது-(1984),
அறிவியலுக்கான தேசிய விருது-(1967)
பதவிகள்:-
ட்ரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
1937-ல் சிகாகோ பல்கலைக்கழக வானியல் ஆய்வாளராகப் பதவியேற்று, அங்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இங்கு 27 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகப் பணியாற்றினார்.
மறைவு:-
நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்ச்சியாளரான இவர்,
ஆகஸ்ட்-21, 1995 ஆம் ஆண்டு தனது
85-வது வயதில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
ஆராய்ச்சிகளின் அடிப்படைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, மறைதல் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு இப்போதும் வழிகாட்டியாக உள்ளது.
தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலாக வெளியிட்டார்.
அக்டோபர்-19. சந்திரசேகர் எல்லை, சந்திரசேகர் உராய்வு, சந்திரசேகர் துருவமுனைப்பு, சந்திரசேகர்-கெண்டல் செயல்பாடு கண்டுபிடித்த அறிவியல் ஆராய்ச்சியாளர்- சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
05:41
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
05:41
Rating: 5
Tags :
இந்திய அறிவியல் அறிஞர்கள்


No comments: