Breaking

அக்டோபர்-20. உலக எலும்புப்புரை தினம். World Osteoporosis Day (WOD).


இன்றைய சிறப்பு நாள்:- அக்டோபர்-20.

உலக எலும்புப்புரை தினம்.
World Osteoporosis Day (WOD).

எலும்புப்புரை நோய் என்பது எலும்பு திசுக்கள் சிதைவு அடைவதே ஆகும். எலும்புகள் பலவீனமாகி உடையும் தன்மை உண்டாகிறது. இதனால் முதுகுத்தண்டும், இடுப்பும் எளிதில் உடையக் கூடிய ஆபத்தும் எழுகிறது. மேலும் இது மௌன நோய் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது ஆண்களைவிட பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக உண்டாக்குகிறது.


வரலாறு:-

உலக எலும்புப்புரை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்- 20 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

எலும்பு புரை நோய் கண்டறிதல் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நோய்த்தாக்கம்:-

மாதவிடாய் நின்று போன பெண்கள் மற்றும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும். குடும்பத்தில்  பெற்றோருக்கு, உடன்பிறந்தவர்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அவர்களின் குடும்பத்திலும் நோய் ஏற்படுகிறது. 
புகை, மது பழக்கம் உடையவர்கள் இந்த நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் டி  குறைவு உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:-

முதுகு வலி,
நாள்பட்ட உயரம் குறைதல்,
வளைந்த தோற்றம், இடுப்பு அல்லது முதுகுத்தண்டு உடை தல்.


தடுக்கும் வழிமுறைகள்:-

கால்சியம் மற்றும் வைட்டமின், சத்து நிறைந்த பால், தயிர், கீரை சாப்பிடுதல்,
சூரிய ஒளியில் விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல், புகை, மது தவிர்த்தல், யோகா, தியானம் செய்தல், மன அழுத்தம் குறைத்தல்.

No comments:

Powered by Blogger.