Breaking

அக்டோபர்-21. அமெரிக்க வானியலாளர்- யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் (Jesse Leonard Greenstein)மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- அக்டோபர்-21.

அமெரிக்க வானியலாளர்-
யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் (Jesse Leonard Greenstein)மறைந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர்-15, 1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் 1937 இல் ஆர்வார்டு பல்கலைகழகத்த16 வது வயதில் சேர்ந்து, டொனால்டு எச். மெஞ்சே வழிகாட்டுதலின்கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

இவர்  பால்வழியில் கார்ல் ஜான்சுகி கண்டுபிடித்த கதிர்வீச்சு அலைகளை விளக்கி அதன் வாயிலைக் கண்டறியும்
பிரெட் இலாரன்சு விப்பிள்
அவர்களின் திட்டத்தில் ஈடுபாட்டார்.

இவர் தன் தொழில்முறை வாழ்க்கையை யெர்க்கேசு வான்காணகத்தில் ஆட்டோ சுத்ரூவ அவர்களின் கீழ் தொடங்கினார். பின் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். 

கண்டுபிடிப்புகள்:-

உலூயிசு ஜி. கென்யேய் அவர்களுடன் இணைந்து இவர் புதிய கதிர் நிரல்மானியையும் அகல் நெடுக்க ஒளிப்படக் கருவியையும் உருவாக்கினார். இவர் கால்டெக் நிறுவன வானியல் திட்டத்தை 1972 வரை வழிநடத்தினார். பின்னர், படைத்துறை வெள்ளோட்டச் செயற்கைக்கோள்களின் வகைபாட்டில் ஈடுபட்டார்.
இவர் இலெவெரெட் டேவிசு இளவலுடன் இணைந்து, 1949 இல் நம் பால்வழியில் உள்ள காந்தப்புலம் அதன் சுருள்கைத் திசையுடன் இணையாக நிலவுவதற்கான செயல்முறை விளக்கம் தந்தார். டேவிசு உடனான கோட்பாட்டுப்பணி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒளியின் முனைவாக்கம் உடுக்கண வெளியில் நிலவும் தூசுமணிகளின் காந்தப்புலச் சிதறலால் விளைகிறது என்ற வில்லியம் ஆல்பர்ட் கில்ட்னரின் முடிவை அடிப்படையாகக் கொண்டதுவாகும்.

இவர் விண்மீன்களில் வேதியியல் தனிமங்கள் செறிந்து இருப்பதை அறியும் முதன்மை ஆய்வில் ஈடுபட்டார். மார்ட்டன் சுகிமிடுடன் இணைந்து முதன்முதலாக பால்வெளியளவுக்குப் பொலிவு உள்ள, நெடுந்தொலைவில் அமைந்த குறும்பொருள்களாக, பகுதி உடுக்கணவெளி கதிர்வீச்சு வாயில்களை (குவேசார்களை) முதன்முதலாக இனங்கண்டார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கதிர்வீச்சு வாயில்களான 3C 48, 3C 273 ஆகிய குவேசார்களின் கதிர்நிரல்கள் சிவப்பு பக்கமாக உயர்பெயர்ச்சியுடன் அமைந்திருந்தன. எனவே இவற்றை இனங்காண்பது மிக அரிதாக இருந்தது. ஆனால் கிரீன்சுடைன் 3C 48 ஐ சுகிமிடுக்கும் முன் இனங்கண்டார். இவரது ஒருசாலை பணியாளர் பலோமார் வான்காணகத்தில் 3C 273 இன் கதிர்நிரலைக் கணித்தார்.

விருதுகள்:-

அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரை விருது-(1970)
புரூசு பதக்கம்-(1971)
அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம்- (1975)

மறைவு:-

அக்டோபர்-21, 2002 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

குறுங்கோள் 4612 கிரீன்சுடைன் இவரது பெயர் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.