Breaking

அக்டோபர்-21. இந்திய காவலர் நினைவு தினம்...


இன்று சிறப்பு நாள்:- அக்டோபர்-21.

இந்திய காவலர் நினைவு தினம்... 


வரலாறு:-

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 
மத்திய சேமக் காவல் படை சார்ந்த எஸ்.பி. கரம் சிங் உட்பட 
10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். 

இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21-ம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. 

அவர்களின் நினைவாக டெல்லியின் சாணக்கியபுரி பகுதியில், தேசிய காவலர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த நினைவு சின்னம் நாட்டுக்கு அர்ப்பணிக்கபட்டது.

மேலும் வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 
போற்றுவோம் காவலர்களை..

No comments:

Powered by Blogger.