Breaking

அக்டோபர்:-24. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்:-(UNITED NATIONS DAY)..


இன்று சிறப்பு நாள் அக்டோபர்:-24.

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்:-(UNITED NATIONS DAY)..





உலக நாடுகளில் அமைதி-பாதுகாப்பு தழைத்தோங்கவும், சர்வதேச பிரச்னைகளை சுமூகமாக கையாளவும், ஐக்கிய நாடுகள் சபை 1945-ஆம் ஆண்டு அக்டோபர்-24 இதே நாளில் உருவாக்கப்பட்டது.

மேலும் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


பொதுச்சபை,
பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என ஆறு முக்கிய அங்கங்களுடன் ஐநா சபை நிறுவப்பட்டது. 

இந்த ஆறு அங்கங்களே சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளை தங்கள் கையிலெடுத்து தீர்வு கண்டு வருகின்றன.

ஐநா அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர அமைப்பாக, பொதுச்சபை உள்ளது. முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள பொது சபைக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. 
பொது சபை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கூடி பன்னாட்டு பிரச்னைகளை அலசும். 

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 1953-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு நடவடிக்கைளை பலப்படுத்தவும் பாதுகாப்பு மன்றம் வழிவகுக்கிறது. 

15 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டும் தடையில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளை, அதே பெயரில் இயங்கும் அமைப்பு கண்காணிக்கிறது. 

அறங்காவலர் அவை, உறுப்பு நாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துகிறது. 

உறுப்பு நாடுகளின் சர்வதேச பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை பன்னாட்டு நீதிமன்றம் செய்கிறது. 
நெதர்லாந்தில் பன்னாட்டு நீதிமன்றம் செயல்படுகிறது. 

நிர்வாகப் பணிகளை நிறைவேற்றும் பணியை ஐநா செயலகம் செய்கிறது.

இன்னும் பல கிளை அமைப்புகளுடன் சர்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அத்தகைய பெருமைக்குரிய ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட தினமான அக்டோபர் 24-ஐ, 1948-ஆம் ஆண்டு முதல் ஐநா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

No comments:

Powered by Blogger.