Home
OCTOBER
அக்டோபர்-25. சூரியக் கரும்புள்ளிகளில் (sunspots) ஆய்வு செய்த ஜெர்மனி வானியலாளர்-சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) பிறந்த தினம்.
அக்டோபர்-25. சூரியக் கரும்புள்ளிகளில் (sunspots) ஆய்வு செய்த ஜெர்மனி வானியலாளர்-சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) பிறந்த தினம்.
20:05
Read
இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-25.
சூரியக் கரும்புள்ளிகளில்
(sunspots) ஆய்வு செய்த ஜெர்மனி வானியலாளர்-சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) பிறந்த தினம்.
பிறப்பு:-
அக்டோபர்-25, 1789 ஆம் ஆண்டு,
தேசாவுவில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்புகளை திறம்பட பயின்று முடித்தார். முதலில் இறையியலாளராக இருந்த இவர், பின்னர் வானியலில் ஆதிக்க கவனம் செலுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
ஆய்வுகள்:-
இவர் 1826 ஆம் ஆண்டு, சூரியக் கரும்புள்ளிகளை பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும்,புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை ஆய்வு செய்வது சிரமமாக கருதினார். பிறகு அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித்தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்தார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து "1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)" எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார்.
அப்போது பெர்ன் வான்காணக இயக்குநராக இருந்த உருடோல்ஃப் வுல்ஃப் , அதை புரிந்துகொண்டு சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வை முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொண்டார். சுகுவாபேயின் நோக்கீடுகள் பின்னர் 1851 இல் அலெக்சாந்தர் வான் அம்போல்டால் தனது அண்டம் (Kosmos) எனும் நூலின் மூன்றாம் தொகுதியில் பயன்படுத்தினார். இப்போது சூரியக் கரும்புள்ளிகளின் அலைவு தன்மையும் நேரமும் துல்லியமாக அறியப்பட்டுள்ளன.
விருதுகள்:-
1857-அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்.
மறைவு:-
வானியலின் அரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான இவர்,
ஏப்ரல்-11, 1875 ஆம் ஆண்டு, தனது 85 வது வயதில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
லண்டன் ராயல் அஸ்ட்ரானோமிக்கல் சொஸைட்டியின் இவரது ஆராய்ச்சி கையெழுத்து பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இவறது வரைபடங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் அளவீடுகள் சூரிய ஒளி நிலைகள் மற்றும் அளவுகள் உதவியாக இருக்க டிஜிட்டல் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர்-25. சூரியக் கரும்புள்ளிகளில் (sunspots) ஆய்வு செய்த ஜெர்மனி வானியலாளர்-சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
20:05
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
20:05
Rating: 5
Tags :
OCTOBER


No comments: