Breaking

அக்டோபர்-29. தேசிய பூனைகள் தினம்.


இன்று சிறப்பு நாள்:- அக்டோபர்-29.
தேசிய பூனைகள் தினம்.

பூனைகள் பண்டைய எகிப்தியர்கள் வழிபாட்டு விலங்காக ஏற்றுக்கொண்டு, அதை வழிபட்டு வந்தனர். 

பூனைகள் மனிதனால் 10,000 ஆண்டுகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. 

பிறகு பூனைகள் மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வளர்க்க தொடங்கினர். 

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. 

வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவை உண்ணும். 

மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகள் நுழைந்துவிடும். பூனைகளுக்கு சிறந்த இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. 

எனவே, இரவில் சிறு சத்தம் கேட்டாலும் இரையை வேட்டையாடி உண்டுவிடும். சத்தமின்றி வேட்டையாடி முடிக்கும் திறமை பூனைக்கு உண்டு.

பூனைகள் பெரும்பாலும் 4-5 கிலோ எடை கொண்டவை. பூனைகளின் சராசரி உயரம் 23-25 செ.மீ மற்றும் உடல் நீளம் 46 செ.மீ, பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாக இருக்கும். 

பூனைகளின் காதுகளில் 32 தசைநார்கள் உண்டு. அவற்றின் உடல் வெப்பநிலை 38-39° (101-102.2°F) தாடையிலுள்ள 35 பற்களும் இரையைக் கொல்லும் வகையிலும், மாமிசத்தை கிழிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. 

பூனைகள் குறைந்த அளவிலான ஒளியை (டபீட்டம் லூசிடம்) கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வை திறன் கொண்டுள்ளது.

1. பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.

2. பூனைகள் 13-14 மணி நேரம் தூங்குவதிலேயே கழித்துவிடுகின்றன.

3. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை.

4. பூனைகள் தமது காதை 180° வரை அசைக்கக்கூடியதுடன் அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது.

5. பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகம்.

6. பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதற்கு காரணம் பூனைகளுக்கு சுவை அரும்புகள் கிடையாது.

7. பூனைகள்  100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்ககூடியது.

8. மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள்  தனித்துவமானவை.

9. பூனைகள் உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
10. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

11. பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது, ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.

12. 32 மாடிகள் உயரத்திலிருந்து விழந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.

13.பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவுக்கு திறன் உடையவை.

14. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எஜமானரை கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். 

நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், பூனை எப்போதும் செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படும்.

No comments:

Powered by Blogger.