அக்டோபர்:-30 மற்றும் 31. உலக சிக்கனம் மற்றும் சேமிப்பு தினம்.(Word Thrift Day)..
இன்று சிறப்பு நாள்:- அக்டோபர்:-30 மற்றும் 31.
உலக சிக்கனம் மற்றும் சேமிப்பு தினம்.(Word Thrift Day)..
சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன..
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' இவ்வுலகில் வாழ பணம் மிகவும் முக்கியமானது- திருவள்ளுவர்..
வரலாறு:-
1921 ஆம் ஆண்டு, முதன்முறையாக ஸ்பெய்ன் நாட்டில் இத்தினத்தை கொண்டாடினர். அதன்பின்னர் சிக்கனத்தை மக்களுக்கு உணர்த்துவது எந்த அளவிற்கு நாட்டிற்கும், உலகமயமாதலிற்கும் முக்கியம் என்பதை அறிந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாட்டினரும் தங்கள் மக்களுக்கு இத்தினத்தினை அறிமுகப்படுத்தினர்.
நோக்கம்:-
பொருளாதார வகையில் ஒரு நாடு முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு
உலக சிக்கன தினம் அக்டோபர்-31 ஆம் தேதியும், இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சில நாடுகளைத் தவிர்த்து மீதியுள்ள நாடுகளில் எல்லாம் இத்தினம் பொது விடுமுறையாகும். அன்றைய தினம், வங்கிகள் மட்டும் செயல்படும். மக்கள் அத்தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, சேமிப்பு
குறித்த சிக்கன முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
மேலும், சேமிப்பு, சிக்கனம் போன்றவைபற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.
கடந்த 1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது.
உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.
நவீன பொருளாதாரமுறை
நம்மிடையே சிக்கனத்துக்கான எண்ணத்தையும், சேமிப்பிற்கான அறிவையும் தூண்டுகிறது.
சிக்கனம் என்பதை பணசேமிப்பு என்பதையும் தாண்டி, பல வகையான சிக்கன தேவைகள் இருப்பதை காணலாம். உதாரணமாக தண்ணீரில் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், உணவு வகைகளில் சிக்கனம், மின்சாரத்தில் சிக்கனம் என பலதுறைகளும் சிக்கனம் என்ற வார்த்தைக்கும் அடங்கி விடுகிறது.
சிக்கனமாய் இருத்தல் என்பதற்கு உணவு உண்ணாமல், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பது என பொருள் அல்ல. ஒருமுறை காமராஜர், “தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் திருடன்” என்று குறிப்பிட்டார். சிக்கன வாழ்வுக்கான சிறந்த எடுத்துக்காட்டு அவரது வாழ்வு. அவசிய, அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி மீதியை சேமித்து வைத்தல்தான் சிக்கனம். நமது சிக்கனம் பிறரின் பசியைப் போக்கும் வல்லமை கொண்டது..
இன்றைய நிலையில் பழமொழிகளைத்
தாண்டி பாடவடிவில் அரசாங்கமே சிக்கனம் குறித்த வகுப்புகளையும், அறிவுறைகளையும் பாடத்திட்டதிலேயே கற்றுத்தருகின்றது.
வீட்டையும் நாட்டையும் காக்கும் சிக்கனம்:
சேமிப்பு, சிக்கனம் என்னும் பகுத்தறிவுகளெல்லாம் தனிப்பட்ட முறையில் நம் வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல், உலகில் தட்டுப்பாடுகளோடு இருப்பவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப் படவேண்டியது அவசியம் ஆகும்.
வாழ்வில் எப்பொழுதுமே சிக்கனத்தை முதன்மையானதாக வைத்திருக்க வேண்டும்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், நிலம், உணவு, எரிபொருள், மின்சாரம் என சிறுசிறு விஷயங்களில் கூட நமது சிக்கனத்தை கடைபிடிப்போம்.
சிறுக கட்டி பெருக வாழ்’ என ஒரு பழமொழி ….
சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கும் நோக்கில் அன்றே நம் முன்னோர் கூறி வைத்த பழமொழி இது.
சேமிப்பின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்வது வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று.
தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பும் அல்லது சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு நாட்டின் முன்னேற்றத்துக்கு
அது முக்கியம் என்பதை உணர்ந்து,
சிக்கனமாக இருந்து, சேமிப்பை கடைபிடித்தால்...
நமது வீட்டையும், நாட்டையும் காக்கும் என்பதில் ஐயமில்லை..


No comments: