அக்டோபர்-31. தேசிய ஒற்றுமை தினமாகக் (National Unity Day)
இன்று சிறப்பு நாள்:-
அக்டோபர் 31.
தேசிய ஒற்றுமை தினம்
வரலாறு:-
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர்-31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் (National Unity Day) கொண்டாடப்படுகிறது.
1947-49 க்கு இடைப்பட்ட காலத்தில் 550 சுதந்திர மன்னர் மாநிலங்களை (சுதேச அரசுகள்) ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கினார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவர் இறந்த பின்பு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
தேசிய ஒற்றுமை நாளான இன்றுஅனைத்து பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்குமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நாளில், 'ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்' என்ற பெயரில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, அனைத்து அரசு அலுவலங்களிலும், காலை, 11:00 மணியளவில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பதாகும்.
அதேபோல், அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிகளிலும், உறுதிமொழி எடுக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உறுதிமொழி:-
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேண என்னையே உவந்தளிப்பேன். இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என உளமார உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.
நாட்டின் உள்ள பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன்' என, உறுதிமொழி எடுக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
No comments: