விண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்! காரணம் இதுதான்!
நாசாவின் ஹப்பிள் டெலெஸ்கோப் இரண்டு விண்மீன்களின் மோதல் காட்சியைப் படம்பிடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த இரண்டு விண்மீன்களின் மோதலினால் விண்வெளியில் 'பேய்' போன்ற முகம் ஒன்று தோன்றியுள்ளது என்பது தான். எதனால் இந்த பேய் முகம் தோன்றியது என்று தெரியுமா?
704 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் தோன்றிய பேய் முகம் பூமியிலிருந்து சுமார் 704 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படும் இரண்டு விண்மீன்களின் முழுமையான அமைப்பு தோற்றம் தான் ஆர்ப்-மடோர் 2026-424 (AM 2026-424) ஆகும். இந்த இரண்டு விண்மீன்களும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக்கொள்ளத் துவங்கியுள்ளதை நாசா ஹப்பிள் டெலஸ்கோப் படம்பிடித்துள்ளது.
பெரிய விண்மீன் உருவாக வாய்ப்பு விண்மீன் திரள்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி வரும்போதெல்லாம், ஒரு விண்மீன் மற்றொன்றால் அழிக்கப்படக்கூடும், இருப்பினும் இந்த அழிவில் ஒரு புதிய உருவாக்கமும் இருக்கும் என்பது தான் உண்மை. மோதிக்கொள்ளும் விண்மீன் திரள்கள் அமைதியாக ஒன்றிணைந்து ஒரு பெரிய விண்மீனை உருவாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
No comments: