Breaking

அக்டோபர்-31. இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர், மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழ் உருவாக்கியவர்- ஜோசப் வில்சன் ஸ்வான் (Sir Joseph Wilson Swan) பிறந்த தினம்.


இன்று பிறந்தநாள்:- அக்டோபர்-31.

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர், மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழ் உருவாக்கியவர்-
ஜோசப் வில்சன் ஸ்வான் 
(Sir Joseph Wilson Swan) 
பிறந்த தினம்.


பிறப்பு:-

அக்டோபர்-31, 1828 ஆம் ஆண்டு சுந்தர் லேண்ட், இங்கிலாந்தில் பிறந்தார்.

கண்டுபிடிப்புகள்:-

மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவர். மின் ஒளி விளக்கைப் பற்றிய தனது கண்டுபிடிப்புகள் பற்றி ஸ்வான் டிசம்பர்-18, 1878 அன்று டைனேயில் உள்ள நியூகேஸில் என்ற இடத்தில் விரிவுரை ஆற்றினார். ஆனால் 1880 வரை தான் கண்டறிந்த மின் விளக்கிற்காக காப்புரிமை பெறவில்லை. அதன் பின்னரே 1880 அன்று தாமசு ஆல்வா எடிசனால் காப்புரிமை பெறப்பட்டது.1881 ல், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் சேவாய் திரையரங்கில், ஸ்வான் மின்சாரம் மூலம் தனது மின்விளக்கை எரியவிட்டார். உலகில் நாடகம் மற்றும் பொது அரங்குகளில் மின் விளக்கு எரிந்தது இதுவே முதல் முறையாகும்.


மறைவு:-

மே-27, 1914 ஆம் ஆண்டு,
இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

ஸ்வான்  கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரீஸ் நகரம் முழுதும் மின்சார விளக்குகளால் ஒளிர்ந்தது.

No comments:

Powered by Blogger.