அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அணியும் முகமூடி, வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..
அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அணியும் முகமூடி, வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..
மருத்துவர்கள் உபயோகப்படுத்தும் முகமூடி ஒரு பக்கம் வெள்ளை நிறத்தாலும், அதன் மற்றோரு பக்கம் நீல நிறமுடையதாகவும் இருக்கும்.
நீலநிற பக்கம்:-
ஒரு வேளை மருத்துவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து , ஏதேனும் நுண்ணுயிர்களில் (micro organisms) உள்ள பாக்டீரியா,மற்றும் வைரஸ்கள், மருத்துவரிடம் இருந்து , மூக்கு மற்றும் வாய் வழியாக, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும்,
மருத்துவர்கள், அந்த முகமூடியின் நீல வண்ணம் வெளியே தெரியும் படி, வெள்ளை வண்ணம் அவர்களின் முகத்தை தொட்ட வண்ணம், படத்தில் கீழே உள்ளது மாதிரி மாட்டி இருப்பர்.
வெள்ளை நிற பக்கம்
மருத்துவரின் உடல் நலம் பாதிக்கப்படவில்லை என்றால், வெள்ளை வண்ணம் வெளியே தெரியும் படி முகமூடி அணிவர்.
இவ்வாறு அணிவதால், வெளியே உள்ள நுண்ணுயிர்கள் அவரை சென்று தாக்காது.
வெள்ளை பக்கம் ஒரு ஃபில்டரைக் கொண்டது. அது அனைத்து பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளை தடுக்கும்.
இரண்டு நன்மை கொண்டது இந்த முகமூடி.
மருத்துவர்கள் இவ்வாறும், நம்மை அனைத்து விதத்திலும் காக்க முற்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து சந்தோஷம் அடைய வேண்டும்.


No comments: