வானூர்தியில் முதன்முதலாகப் பயணிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசியங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்..
வானூர்தியில் முதன்முதலாகப் பயணிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசியங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்..
விமானம் எரிபொருளைச் சேமிப்பதற்காக உயரத்தில் பறக்கும் ( 40000 அடி வரை)
விமானம் உயரே செல்லச் செல்ல அங்கே காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே போகும்.
அதை சரிப்படுத்த விமானத்தின் உள்ளே காற்றின் அழுத்தம் அதிகப்படுத்தப் படும்.
இப்படிக் காற்றின் அழுத்தம் மாறும் போது காதுக்கு உள்ளேயும் வெளியேயும் அழுத்தம் மாறுபடும்.
அதை காதுக்கும் மூக்குக்கும் உள்ள ஒரு குழாய் (auditory tube) மூலம் சரி செய்யப்படும். இந்த குழாயில் அடைப்பு இருந்தால் வலி அதிகமாகும்.
இந்த நிகழ்வு விமானம் மேலே செல்லும் வரையிலும் மற்றும் கீழே இறங்கும் போதும் நடைபெறும்.
புறப்படும் முன் மிட்டாய் கொடுப்பது உமிழ்நீர் சுரக்கவும் அதை முழுங்கிக் கொண்டிருந்தால் காது வலி குறையும்/ நீங்கும்.
இருக்கையில் அமர்ந்து இருக்கும் வரை அதன் இருக்கைப்பட்டையை (சீட்பெல்ட்) அணிந்தே இருக்கவும்.
விமானம் காற்றின் ஊடே பறப்பதால் எதுவும் எப்போதும் நடக்கலாம்.
விமானத்தின் இருக்கையில் பாதுகாப்பு அறிவிப்புகள் அட்டையை (safety instructions card) நன்றாக படித்து புரிந்து கொள்ளவும்.
அதில்
அவசர காலத்தில் வெளியேறும் வழிகள், உயிர்வளி முகமூடி (oxygen mask) பயன்படுத்தும் முறை உயிர் காக்கும் மேலுறை (Life jacket).
போன்றவைகளைப் படித்து அறியவும்.
ஏதேனும் உதவி தேவையெனில் விமானப் பணிப்பெண்ணை அழைக்கும் பொத்தானை (call button) தெரிந்து கொள்ளவும்.
கழிவறை (டாய்லட்).
உலர்ந்த தரை. மெல்லிழைத்தாளைத் (டிஷ்யூ பேப்பர்) தான் பயன்படுத்த வேண்டும்.
விமானத்தின் எரிபொருள் மண்ணெண்ணெய் ஆகும்.
இதுவரை எத்தனையோ கோடானுகோடி மக்கள் விமானத்தில் பயணித்துள்ளார்கள்.


No comments: