நம்முடைய உடலில் ஆங்காங்கே மச்சங்கள் காணப்படுகின்றன ஏன் என்று உங்களுக்கு தெரியுமா...
நம்முடைய உடலில் ஆங்காங்கே
மச்சங்கள் காணப்படுகின்றன ஏன் என்று உங்களுக்கு தெரியுமா...
மச்சங்கள் அனைவருக்கும் அழகானதாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைந்துவிடுவதில்லை.
சிலருக்கு மச்சங்கள் முக அழகைக் கெடுக்கும் விதத்திலும், சிலருக்கு விரும்பத் தகாததாகவும் அமைந்துவிடுகிறது.
திடீரென்று மச்சம் புதிதாகவும் தோன்றுவது உண்டு.

நம் முகத்தில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்து, அடைப்பை ஏற்படும்போது அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகிறது.
பிறந்த சில குழந்தைகளுக்கு கால் அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருக்கும். இது அவர்கள் வளர வளர மறைந்துவிடும்.
கருப்பு தவிர வெள்ளை, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களிலும் மச்சங்கள் காணப்படும்.
ஆரோக்கியம் என்ற அளவில்மச்சங்களினால் பாதிப்புகள் ஏதும் பெரிதாக ஏற்படுவதில்லை. ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ கவனிக்கவேண்டியது அவசியமாகிறது.
ஓரளவுக்கு மேல் மச்சத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரபணுக் கோளாறாகவோஅல்லது சருமப் புற்றுநோயாகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளது.
பிறக்கும்போது இருக்கும் மச்சங்கள் தவிர சிலருக்கு வளர்ந்த பிறகும் புதிதாக உருவாகலாம்.
நமது சருமத்தில் இருக்கும் மெலனின் சுரப்பைப் பொறுத்து அவை திடீரென தோன்றுகின்றன.
இந்த வகை மச்சங்கள் வளர்வதாக நினைக்கின்றனர்.
இந்த மச்சங்கள் ஒருவர் வளர வளர அதுவும் பெரிதாகும்.
சிலருக்கு இது பெரிதாகி கருப்பு நிறத்தில் மருவாக மாறவும் வாய்ப்புள்ளது. இதனால், எந்த பிரச்னையும் இருப்பதில்லை.
மச்சங்களை முழுதாக நீக்க முடியும். மச்சங்களை நீக்க லேஸர் முறையைப் பயன்படுத்தலாம். Q switch Nd - YAG Laser முறையில் நீக்கலாம்.
இதற்கு Radio frequency முறை உகந்ததல்ல. முறையான பிளாஸ்டிக் சர்ஜனிடம் மச்சங்களை அகற்றலாம். ஆனால், மச்சங்களை சரிவர முழுமையாக நீக்காமல் விட்டால் அந்த இடத்தில் காயங்கள், அரிப்புகள் தோன்ற ஆரம்பிக்கும். அதிகபட்சமாக சருமப் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.
No comments: