தொட்டால் சிணுங்கி தாவரத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்
தொட்டால் சிணுங்கி:-
உலகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கித் தாவரம் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தோன்றின.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது.
தாவரங்களில் மிக விநோத மாகவுள்ள ‘ தொட்டாச்சிணுங்கி’ செடியைத் தாவரவியலாளர்கள் 'மைமோசா பூடிகா' என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
நாம் தொட்டவுடனே இவை சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் இருந்து வந்தது.
காலப் போக்கில் இந்தப்பெயர் தொட்டால் சிணுங்கி என்று மருவியது.
தொட்டால் சிணுங்கியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளரும். மற்றொன்று, சாதாரண இடங்களில் கூட வளரும்.
கல்வராயன் மலையில் உருவாகி, பாயும் ஏராளமான சிற்றாறுகள், நீரோடை, ஏரி போன்ற நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் தொட்டால் சிணுங்கி என்ற செடி அதிகமாகக் காணப்படும்.

இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது.
இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன.
சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.
தொட்டால் சிணுங்கி மலர்கள் அழகானவை. இச்செடிகள் பூத்துக் குலுங்கினால், பஞ்சம்போகும் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை.
தொட்டால் சிணுங்கி பூத்தால் நல்ல மழை பெய்யும், நல்லவை அதிகமாக நடக்கும் என்பார்கள்.
தொட்டால் சிணுங்கிச் செடியின் அமைப்பு / செயல்படும் விதம் :
மைமோசா பூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும்.
இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது.
இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும்.
இந்த முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும்.
இச்செடியைக் காற்று, பூச்சி, விலங்கு, மனிதன், மழைத் துளி ஆகியவை தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும், முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன. இதனால் இலைகள் சுருங்குகின்றன.
இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும். இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும்.
இலைக் காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது.
மனிதர்களுக்குள் உணர்ச்சிகளை ஏற்படுத்தக்குடிய அதே வகையான செல்கள் இந்த வகை தாவரத்திற்குள்ளும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்:
இது ஒரு மூலிகை.
சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்பார்கள்.
No comments: