தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்;(007) புதல்வரைப்பெறுதல்
குறள் எண்:0066 _________________________________
_______________________________
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
_______________________________
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே, குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Translation:
The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
_________________________________
_________________________


No comments: