Breaking

அக்டோபர்-26. நிலாவின் இயக்கத்துக்கான கோட்பாட்டை மேம்படுத்திய ஆஸ்திரிய வானியலாரும் கணிதவியலாளர்-தியோடோர் வான் அப்போல்சர்(Theodor von Oppolzer) பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-26.


நிலாவின் இயக்கத்துக்கான கோட்பாட்டை மேம்படுத்திய ஆஸ்திரிய வானியலாரும் 
கணிதவியலாளர்-தியோடோர் வான் அப்போல்சர்(Theodor von Oppolzer) பிறந்த தினம்.

பிறப்பு:-

அக்டோபர்-26, 1841 ஆம் ஆண்டு,
பிராகா, ஆஸ்திரியாவில் பிறந்தார். இவர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். 1865ல் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தனி வான்காணகம் ஒன்று வைத்திருந்தார்.

பணிகள்:-

1866 ஆம் ஆண்டு, வியன்னாப் பல்கலைக்கழகத்தில் வானியலும் புவிமேற்பரப்பியலும் பயிற்றுவித்தார். 1875 இல் பேராசிரியரானார். 1873 ஆம் ஆண்டு இவர் ஆஸ்த்திரிய புவிமேற்பரப்பியல் துறையின் இயக்குநர் ஆனார். 1886 இல் பன்னாட்டுப் புவிமேற்பரப்பியல் கழகத்தின்
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

நூல்கள்:-

Canon der Finsternisse 
ஆகும்.

சிறப்புகள்:-

இவர் 14,000 மடக்கைகளின் மதிப்புகளை மனனமாக வைத்திருந்தார். 1868 இல் சூரிய ஒளிமறைப்பு நோக்கீட்டுக் குழுவை வழிநடத்தினார். 

1887 ஆம் ஆண்டு, கிமு 1,200 முதல் கிபி 2,161 வரையிலான 8,000 சூரிய ஒளிமறைப்பு
களையும் 5,200 நிலா ஒளிமறைப்பு
களையும் தொகுத்தார்.
அப்போல்சர் 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை பெரும்பாலும் வால் வெள்ளி, குறுங்கோள்களின் வட்டணைகளின் கூறுகளை பற்றியே அமைந்தன. இவர் வால்வெள்ளி, கோள்களின் வட்டணை உறுப்புகளைக் கண்டறிதல் பற்றிய இரட்டைத் தொகுதிகளால் ஆகிய கையேட்டையும் வெளியிட்டுள்ளார்.இவரது இரு நூல்களும் பல ஆண்டுகளுக்கு சிறந்த வானியல் ஆலோசனை  நூல்களாகப் பயன்பட்டன.
இறக்கும் தறுவாயிலும் அவர் நிலாவின் இயக்கத்துக்கான கோட்பாட்டை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

தகைமைகளும் விருதுகளும்:-

வியன்னா பேரரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 1882 இல் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 1883 இல் தேர்வு செய்யப்பட்டார்.

நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் இவரது பெயரால் அப்போல்சர் குழிப்பள்ளம் என அழைக்கப்படுகிறது.

ஒரு குறுங்கோள் 1492 அப்போல்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் அவரது துணைவியார் பெயரை (237 கோயெலெச்டீனா) என ஒரு குறுங்கோளுக்கும் அவர்களது இருபெண்மகவுகள் பெயர்களை (153 ஃஇல்டா, 228 அகதெ) என இரு குறுங்கோள்களுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.


மறைவு:-

டிசம்பர்-26, 1886 ஆம் ஆண்டு,
வியன்னாவில்
மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.