Home
NOVEMBER
நவம்பர்-08 அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர், சீபோர்கியம் தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்தியவர்- டார்லீன் சி. ஆஃப்மேன் (Darleane C. Hoffman) பிறந்த தினம்.
நவம்பர்-08 அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர், சீபோர்கியம் தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்தியவர்- டார்லீன் சி. ஆஃப்மேன் (Darleane C. Hoffman) பிறந்த தினம்.
18:30
Read
இன்று பிறந்த நாள்:- நவம்பர்-08
அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர், சீபோர்கியம் தனிமத்தின்
நிலவலை உறுதிப்படுத்தியவர்-
டார்லீன் சி. ஆஃப்மேன் (Darleane C. Hoffman) பிறந்த தினம்.
பிறப்பு:-
இவர்,நவம்பர்-08, 1926 ஆம் ஆண்டு
டெரில், அயோவா அமெரிக்காவில் பிறந்தார்.
அயோவா மாநிலப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து நெல்லி மே நாய்லரிடம் வேதியியல் பாடம் பயின்றார்.
மேலும் இதே துறையில் மேல்படிப்பும் பயில முடிவு செய்து, 1948 இல் வேதியியல் இளவல் பட்டமும், 1951 இல் அணுக்கரு வேதியியல் முனைவர் பட்டமும் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
பணிகள்:-
டார்லீன் ஓராண்டுக்கு ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் பணிபுரிந்தார். பின்னர் தன் கணவருடன் இலாசு அலமோசு அறிவியல் ஆய்வகத்தில் இணைந்தார். இங்கு இவர் 1953 இல் பணியாளராகச் சேர்ந்தார்.
இவர் 1979 இல் ஓரகத்தி, அணுக்கரு வேதியியல் பிரிவின் தலைமை பதவி ஏற்றார்.
இலாரன்சு பெர்க்கேலி அணுக்கரு ஆய்வகத்தில் அடர் தனிம அணுக்கரு, கதிரியக்க குழுத் தலைமை பொறுப்பும் வகித்தார். கூடுதல் பணியாக சீபோர்கு கதிர்வீச்சியல் நிறுவனத்தை நிறுவும் பணியும் 1991 இல் மேற்கொண்டார். பின் அதன் முதல் இயக்குநராகவும் 1996 வரை செயல்பட்டுள்ளார்.
கண்டுபிடிப்புகள்:-
சீபோர்கியம் என்ற 106 வது தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்திய ஆய்வாளர்களில் முக்கியமானவராவார்(Confirmed the Existence of Seaborgium, element 106).
விருதுகள்:-
பிரீசுட்லி பதக்கம், 2000 (மேரி எல். கோல்டுவுக்குப் பின் (1997) இப்பதக்கத்தைப் பெற்றவர் இவரே)
தேசிய அறிவியல் பதக்கம்-1997,
கர்வாந் ஓலின் பதக்கம்-1990,
உட்கரு வேதியியல் ACS விருது-1983 (இவ்விருதைப் பெறும் முதல் பெண்மணி)
குக்கன்ஃஈம் உறுப்பினர்-1978,
நார்வே அறிவியல், எழுத்து கல்விக்கழகத்தின் உறுப்பினர் பதவி வகித்தார்.
ஓய்வு பெற்ற பிறகும் மூதறிவுரைஞராகவும், பட்டய இயக்குநராகவும் இருந்து சாதனை படைத்தார்.
நவம்பர்-08 அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர், சீபோர்கியம் தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்தியவர்- டார்லீன் சி. ஆஃப்மேன் (Darleane C. Hoffman) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
18:30
Rating: 5
Tags :
NOVEMBER
No comments: