Home
இந்திய அறிவியல் அறிஞர்கள்
நவம்பர்-09. மரபுக்குறியீடு (genetic code) பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி செய்த இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி- ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana) மறைந்த தினம்.
நவம்பர்-09. மரபுக்குறியீடு (genetic code) பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி செய்த இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி- ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana) மறைந்த தினம்.
01:47
Read
இன்று நினைவு நாள்:- நவம்பர்-09.
மரபுக்குறியீடு
(genetic code) பற்றியும்,
புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி செய்த இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி-
ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana) மறைந்த தினம்.
பிறப்பு:-
பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில்
ஜனவரி-09, 1922 ஆம் ஆண்டு
பிறந்தார்.
லாகூர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். 1945 ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அரசு உதவித் தொகை பெற்று இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, டாக்டர் பட்டம் பெற்றார்.
1948-ல் ஸ்விட்சர்லாந்து ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952-ல் பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம் என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார்.
1953-ல் காமன்வெல்த் ஆய்வுக் கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார்.
1960-ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
4 ஆண்டுகள் உயிரி வேதியியல் பேராசிரியராகவும், பிறகு அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணி யாற்றினார்.
ஆராய்ச்சிகள்:-
1959 இல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்காக 1968-ல் இவருக்கும் நோரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் இவர் மேற்கொண்ட மரபுக்குறியீடு (genetic code) பற்றிய ஆய்வு பெரும் வரவேற்பைப் பெற்றது.
உயிரினங்களின் குடற் பகுதியில் இருக்கும் எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கத்தில் குரானாவும் அவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.
படிப்படியாக முயன்று இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர், 1976-ல் இந்த செயற்கை மரபணுக்களை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியுடன் இணைத்ததும் அவை இயற்கை மரபணுக்களைப் போலவே செயல்பட்டன.
புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார்.
விருதுகள்:-
1968 ஆம் ஆண்டு
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க்,
இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்தார்.
1969 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.
1968 - ஹாவாயில் ஹோனலூலுவில் அமைந்துள்ள வாட்டுமுல் அமைப்பு 'சிறப்பு மிக்கச் சேவைக்கான விருதை' இவருக்கு அளித்துச் சிறப்பித்தது.
1971-ல் பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கழகத்தின் 'செயல் வெற்றிச் சாதனைக்கான விருதை' (American Academy of Achievement Award) அளித்தது.
கொரானா நிகழ்வு:-
விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத்துறை, இந்தோ-அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து 2007-ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கி கொரானாவின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மறைவு:-
இந்திய- அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர்,
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை பெற்ற இவர், 2011 ஆம் ஆண்டு நவம்பர்-09 ஆம் தேதி மரணமடைந்தார்.
நவம்பர்-09. மரபுக்குறியீடு (genetic code) பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி செய்த இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி- ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
01:47
Rating: 5
Tags :
இந்திய அறிவியல் அறிஞர்கள்
No comments: