Home
இந்திய அறிவியல் அறிஞர்கள்
நவம்பர்-10. 20 ஆம் நூற்றாண்டின் முதன்மையான இந்தியக் கணித வல்லுனர், பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என அழைக்கப்படுபவர்-வி. கணபதி அய்யர் (V.Ganapathy Iyer) பிறந்த தினம்.
நவம்பர்-10. 20 ஆம் நூற்றாண்டின் முதன்மையான இந்தியக் கணித வல்லுனர், பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என அழைக்கப்படுபவர்-வி. கணபதி அய்யர் (V.Ganapathy Iyer) பிறந்த தினம்.
04:51
Read
இன்று பிறந்தநாள்:- நவம்பர்-10.
20 ஆம் நூற்றாண்டின் முதன்மையான இந்தியக் கணித வல்லுனர், பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என அழைக்கப்படுபவர்-வி. கணபதி அய்யர் (V.Ganapathy Iyer) பிறந்த தினம்.
பிறப்பு:-
கேரளா கோழிக்கோட்டில்
வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப் நவம்பர்-10, 1906 இல் பிறந்தார்.
உள்ளூரிலேயே பள்ளியிறுதியை (எஸ்.எஸ்.எல்.சி) யை முடித்து, சென்னை மாநிலக் கல்லூரி யில் படித்து 1927 இல் பி.ஏ. ஆனர்ஸ் தேர்வில் கணிதப் பிரிவில் முதல் வகுப்பில் தேறினார்.
1938ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் டி.எஸ். ஸி பட்டம் பெற்றார்.
ஆய்வுகள்:-
சிக்கலெண் பகுவியலிலும், Entire Functions என்ற பிரிவிலும் அவர் ஆய்வுகளைத் தொடங்கி, சார்புப் பகுவியல், இடவியல், தொடர்கூட்டு வாய்ப்பு,
நிகழ்தகவு, தன்னிச்சை மாறி, முதலிய வை அடங்கும்.
பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் உள்ளடங்கிய எல்லா கணிதப் பிரிவுகளிலும்
இடவியல் என்ற இருபதாவது நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவிலும் அவர் ஆழம் மிகுந்த 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உலகமறியப் போற்றப் பட்டவர்.
பதவிகள்:-
மசூலிப்பட்டணத்தில் அரசாங்கக்
கல்லூரியில் விரிவுரையாளராக 2 ஆண்டுகள், 1939 இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்துறையில் சேர்ந்தார்.
1950 இல் பேராசிரியராகவும் கணிதத் துறைத் தலைவராகவும் உயர்ந்தார்.
1972 இல் அவர் ஓய்வு பெறும் வரையில் அங்கிருந்தே கணித உலகுக்குப் பணியாற்றினார்.
இந்தியக் கணிதக்கழகத்தின்தலைவராக (1957 - 1959) தேர்ந்தெடுக்கப்பட்டு, 1958 இல் அதன் பொன்விழாச் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
1960 ஜனவரியில் நடந்த இந்திய விஞ்ஞானக் கழகத்தின்வருடாந்திர மாநாட்டில், அதன் கணிதப் பிரிவின் தலைவராகப் பதவி நடத்தினார்.
இறப்பு:-
15 இந்திய மாணவ மணிகளை முனைவர் பட்டம் பெற பயிற்றுவித்த
தோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் கணித உலகுக்குப் பயனுள்ள சேவை செய்யக் காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருந்த இவர், ஜூன்-13, 1987 இல் மரணமடைந்தார்.
நவம்பர்-10. 20 ஆம் நூற்றாண்டின் முதன்மையான இந்தியக் கணித வல்லுனர், பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என அழைக்கப்படுபவர்-வி. கணபதி அய்யர் (V.Ganapathy Iyer) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
04:51
Rating: 5
Tags :
இந்திய அறிவியல் அறிஞர்கள்
No comments: