நவம்பர் -10. ஏகே-47 துப்பாக்கி கண்டுபிடித்த- கலாசுனிக்கோ பிறந்த தினம்.
04:45
Read
இன்று பிறந்தநாள்:- நவம்பர் -10.
ஏகே-47 துப்பாக்கி கண்டுபிடித்த- கலாசுனிக்கோ பிறந்த தினம்.
கலாசுனிக்கோவ் 1947ம் ஆண்டு ஏகே47 தானியங்கித் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்.
இதன் பிறகு ரஷ்யாவில் இவரின் புகழ் உச்சக் கட்டத்தை எட்டியது.
உருசியாவின் ஆயுத மேதை என இவருக்குப் புகழ் மாலை சூட்டப்பட்டதுடன் அரசியல்வாதிகளின் ஆதரவையும் பெறலானார்.
இலக்கியவாதியான கலாசுனிக்கோவ் பின்னர் பிரபல ஆயுத உற்பத்தியாளராக மாறினார்.
ஏகே-47
உருசியாவின் ஆயுதங்களுக்கு மிகப் பொருத்தமான உதாரணம் கலாசுனிக்கோவ் என்றும் அதிபர் சொன்னார். "நான் ஏகே47ஐ தாய்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நல்ல நோக்குடனே தயாரித்தேன்.
அரசியல்வாதிகள் இந்த ஆயுதத்தை மனித அழிவுக்குப் பாவிப்பது வேதனையளிக்கின்றது.
இளமையில் இலக்கியவாதியாக, கவிஞராக இருந்த என்னை விதி ஆயுத உற்பத்தியாளராக மாற்றிவிட்ட தென்றார்.
1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
விரைவிலேயே டி-34 பீரங்கிப் படைக்கலனின் 24 வது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில் உருசியப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார்.
குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸ்க் தாக்குதலில் உருசியப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.
நவம்பர் -10. ஏகே-47 துப்பாக்கி கண்டுபிடித்த- கலாசுனிக்கோ பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
04:45
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:45
Rating: 5
Tags :
NOVEMBER


No comments: