Breaking

நவம்பர்-15. கெப்லரின் கோள் இயக்க விதிகள் (Kepler conjecture) உருவாக்கிய செருமானியக் கணிதவியலாளர்-ஜோகான்னஸ் கெப்லர் (Johannes Kepler) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-15.

கெப்லரின் கோள் இயக்க விதிகள்
(Kepler conjecture) உருவாக்கிய 
செருமானியக் கணிதவியலாளர்-ஜோகான்னஸ் கெப்லர்
(Johannes Kepler) மறைந்த தினம்.

பிறப்பு:-

டிசம்பர்-27, 1571 ஆம் ஆண்டு, 
ஜெர்மனி மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் இசுட்டட்கார்ட்டுப் பகுதியில் பிறந்தார்.

சிறு வயதிலேயே வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை கண்டுபிடித்தார்.
ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை கண்டுபிடித்தார்.

1589ல், இலக்கணப் பாடசாலை, 
லியோன்பெர்கில் இலத்தீன்
பாடசாலை மற்றும் மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் விட்டஸ் முல்லரின் கீழ் தத்துவமும், யாக்கோபு ஈபிரான்டின் (Jacob Heerbrand) கீழ் இறையியலையும் கற்றார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583 -இலிருந்து 1631வரை கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின்முறைமையையும், கோப்பர்
நிக்கசின் முறைமையையும் கற்றார். 

கண்டுபிடிப்புகள்:-

முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டபோது, ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே கோளத்தினால் சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒரு கோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும்போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார்.

கெப்லரின் முதலாவது விதி:-

ஒரு கோளின் சுற்றுப்பாதை, 
கதிரவன் ஒரு குவியத்தில் அமைந்திருக்கும் ஒரு நீள்வட்டமாகும், என்பதே கெப்லரின் முதலாவது விதியாகும்.

கெப்லரின் இரண்டாவது விதி:-

கெப்லரின் இரண்டாவது விதி, கோளையும், கதிரவனையும் இணைக்கும் நேர்கோடு, கோளின் சமகால இடைவெளி நகர்வில் சம பரப்பைத் தடவிச்செல்லும்,என்கிறது.

கெப்லரின் மூன்றாவது விதி:-

கோள்களின் ஒரு முழுசுற்றுக்கால அளவின் இருபடி, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) முப்படிக்கு நேர் சார்புடையது (நேர் விகித சமனாகும்). மேலும் நேர்சார்புக் கெழு (மாறிலி) எல்லாக் கோளுக்கும் ஒரே மதிப்பு கொண்டதாகும். என்பது கெப்லரின் மூன்றாவது விதியாகும்.


பணிகள்:- 

இவர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றினார்.

நூல்கள்:-

Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice Mundi (ஆர்மோனிசெ முண்டி) நூல்கள் மூலம் 
கோள்களின் இயக்க விதிகள் விவரிக்கப்பட்டது.


இறப்பு:-

நவம்பர்-15, 1630 ஆம் ஆண்டு, ரெஜென்ஸ்பர்க்கில் மரணமடைந்தார்.
கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள்:-
கெப்லர் விண்வெளி அவதான நிலையம்

No comments:

Powered by Blogger.