Breaking

நவம்பர்-15. முகிலறையைக் (cloud chamber) கண்டுபிடித்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வானியியலாளர்-சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-15.


முகிலறையைக்
(cloud chamber) கண்டுபிடித்து 
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வானியியலாளர்-சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) மறைந்த தினம்.


பிறப்பு:-

இவர்,
பிப்ரவரி- 14, 1869 ஆம் ஆண்டு,
மிட்லோத்தியன் 
ஸ்காட்லாந்தில்
பிறந்தார்.
ஓன்சு கல்லூரியில், 
உயிரியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் கேம்ப்ரிட்ச், சிட்னி சசெக்சு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

கண்டுபிடிப்புகள்:-

இவர் வானிலையியலில்
விருப்பம் கொண்டு, 1893 இல் முகில் மற்றும் அதன் இயல்புகளை ஆராய்ந்தார். பென் நெவிசு என்ற இடத்தில் உள்ள வானியல்  நிலையத்தில் பணியாற்றும் போது முகில்த் தோற்றம் பற்றி கண்டறிந்தார். இதனை அவர் பின்னர் கேம்பிரிட்சில் உள்ள ஆய்வுகூடத்தில் சிறிய அளவில் அடைக்கப்பட்ட கலன் ஒன்றில் ஈரப்பதன் கொண்ட வளிமம் மூலம் சோதித்தார். பின்னர் அயனிகளாலும், கதிர்வீச்சினாலும் ஏற்படக்கூடிய முகிற்சுவடுகளை  கண்டுபிடித்தார்.

விருதுகள்:-

ராயல் மெடல்- 1922,
ஹோவார்ட் என் போட்ஸ் மெடல்-1925,
போர்மர் ஆஃப் ராயல் சொசைட்டி-1900,
இயற்பியல் நோபல் பரிசு -1927,
ஃபிராங்க்லின் பதக்கம்-1929,
டட்டெல் பதக்கம் மற்றும் பரிசு -1931,
அவார்டு என். பொட்சு விருது-1925,
பிராங்கிளின் விருது-1929,

இறப்பு:-

நவம்பர்-15, 1959 ஆம் ஆண்டு
எடின்பரோ, ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.