நவம்பர்-16. உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance)
08:36
Read
இன்று:- நவம்பர்-16.
உலக சகிப்புத் தன்மை நாள்
(International Day for Tolerance)
மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளவில் ஆண்டுதோறும் நவம்பர்- 16 கொண்டாடப்படுகிறது.
மனிதகுலம் அறிவுபூர்வமாகவும் நன்னெறியின் வழியிலும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அகிம்சை சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
அனைவரும் வாழ்வதற்கு தேவையான அன்பு,பரிவு ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த குணங்களுக்கு அடிப்படையாக குறைந்தபட்டசம் சகிப்புத்தன்மையாவது இருக்கவேண்டும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகின்றது.
“திறன் அல்ல தன் – பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று. ” – திருக்குறள்..
‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
நவம்பர்-16. உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance)
Reviewed by JAYASEELAN.K
on
08:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:36
Rating: 5
Tags :
Special Day


No comments: