Breaking

நவம்பர் 18. உலக சி.ஓ.பி.டி தினம் - (Chronic Obstructive Pulmonary Disease day)..

புகை நமக்கு பகை
====================
இன்று-நவம்பர் 18.

உலக சி.ஓ.பி.டி தினம் - 
(Chronic Obstructive Pulmonary Disease  day)..

உலக அளவில், மனித உயிர் இழப்புக்கான காரணிகளில் நான்காவது இடத்தில் சி.ஓ.பி.டி (Chronic Obstructive Pulmonary Disease) இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

நாம் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை. காற்றில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் பிரித்து ரத்தத்தில் சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியாகத்தான் நுரையீரலை அடைகிறது.

 மூச்சுக்குழாயில் சுவர் பகுதியில் தடிமன், சுருக்கம் ஏற்படும்போது காற்று செல்வது தடைப்படுகிறது.  இந்தப்  நிலைதான் நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய்.

காரணம்:

புகைபிடிப்பது தான் இந்த நோய்க்கு முக்கியக் காரணம். புகைபிடிக்கும்போது, மூச்சுக்குழாயில் நச்சுக்கள் படிந்துகொண்டே இருக்கும். 

இது மூச்சுக் குழாய் சுவரைப் பாதிக்கக்கூடியது.

தொடர்ந்து புகை உள்ள காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருக்கும்போது, மூச்சுக்குழாயின் தன்மை பாதிக்கப்பட்டு, சுருங்க ஆரம்பிக்கும்.

 ஒரு கட்டத்தில் மூச்சுவிடவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

சிகரெட் புகை மட்டுமல்ல, *மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதாலும்* இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

சிகரெட் புகை, தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவை காற்றில் கலப்பதால், மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

விறகு அடுப்பில் சமைப்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, முடிந்த வரை விறகு அடுப்பைத் தவிர்ப்பதே சிறந்தது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை காரணமாக (சி.ஓ.பி.டி-C O P D) பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் சிகரெட் பிடிக்கவும் கூடாது, சிகரெட் பிடிக்கப்படும் இடங்களில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள்:

👉🏻இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் அதிகமாக இருத்தல்.

👉🏻தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேல் அடர் மஞ்சள் நிறம், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கெட்டியாகச் சளி வருவது.

👉🏻நீண்ட நேரம் உறங்கிய பின்னர் படுக்கையில் இருந்து விழிக்கும்போது தொண்டையில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகள்.

👉🏻மாடிப்படி ஏறும்போதோ, அதிக எடையுள்ள  பொருளைத் தூக்கிக்கொண்டு சிறிது தூரம் நடக்கும்போதோ, மூச்சுவிட சிரமமாக இருக்கும். 

Treatment

 சி.ஓ.பி.டிக்கான பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

ஸ்பைரோமெட்ரி பரிசோதனை* மற்றும் எக்ஸ்ரே
~~~~~~~~~~~~~~~~
இந்தப் பரிசோதனையில், ஸ்பைரோமெட்ரி கருவியில் உள்ள குழாய் போன்ற வடிவத்தில் ஒரு முனையில் வாய் வைத்து நன்றாக ஊத வேண்டும். நுரையீரலுக்கு எவ்வளவு வேகத்தில், எவ்வளவு காற்று செல்கிறது என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்

எக்ஸ்ரே பரிசோதனை மூலம் நுரையீரல் எந்த அளவுக்கு வீங்கியிருக்கிறது, நெஞ்சுக்குள் எவ்வளவு சளி கட்டியிருக்கிறது என்பதை அறிய முடியும்*.

தீர்வு

சி.ஓ.பி.டி-C O P D* பிரச்னையைக் குணப்படுத்த முடியாது.  மூச்சுக்குழாய் சுருக்கம் ஏற்பட்டுவிட்டால், அதை சரிசெய்ய முடியாது. ஆனால், ஆரம்ப நிலையில் இந்த பிரச்னையைக் கண்டறிவதன் மூலம், பாதிப்பு தீவிரம் அடைவதைத் தடுக்க முடியும். 
அதனால், சி.ஓ.பி.டி பிரச்னை ஏற்பட்டாலே மரணமோ என்ற பீதி வேண்டாம். 
அடிக்கடி நுரையீரலைப் பரிசோதித்துக்கொள்வதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே சி.ஒ,பி.டியை கண்டுபிடித்துவிட்டால் ,சிகிச்சைகள் மூலம் பாதிப்பில் இருந்து எளிமையாகத் தப்பித்துவிடலாம்.

சி.ஓ.பி.டி-C O P D யைத் தவிர்க்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சிகரெட் புகை உட்பட புகை நிறைந்த சூழலை தவிர்க்கலாம்.

சாலைப் புகையில் இருந்து தப்பிக்க, மாஸ்க் அணிவது நல்லது.

தினமும்  இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

வீட்டைச் சுற்றி பசுமைத் தோட்டங்கள், மரங்கள் வளர்ப்பது நல்லது.

ஒவ்வோர் ஆண்டும் ‘உலக சி.ஓ.பி.டி அமைப்பு’ வெவ்வேறு ‘தீம்’களைக் கடைப்பிடிக்கும். இந்த வருடம் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கான தீம்களை அறிவித்திருக்கிறது.

பொதுமக்களுக்கு  - உங்களுக்கு சுவாசித்தலில் சிரமம் இருந்தால், இதுவரை மருத்துவரை அணுகாவிட்டாலும் பிரச்னை இல்லை, இன்னும் நேரம் இருக்கிறது. விரைவில் மருத்துவரை அணுகுவது நல்லது.

நோயாளிகளுக்கு -  சி.ஓ.பி.டி இருப்பதை நினைத்து வருந்த வேண்டாம். ஆரோக்கியமாகப் பல வருடங்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

மருத்துவர்களுக்கு - சி.ஓ.பி.டி இருப்பவர்களைக் கண்டறிந்து நல்ல சிகிச்சை அளித்து அவர்களின் சுவாசத்தை மேம்படுத்த உதவுங்கள்!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

No comments:

Powered by Blogger.