நவம்பர்-18.மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் வென்ற ஜான் ஓ'கீஃப்(John O'Keefe) பிறந்த தினம்.
இன்றைய பிறந்த நாள்:- நவம்பர்-18
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் வென்ற ஜான் ஓ'கீஃப்(John O'Keefe)
பிறந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர் 18, 1939 ஆம் ஆண்டு
நியூயார்க்கில் பிறந்தார்.
ரெஜிஸ் உயர்நிலைப் பள்ளியில் (மன்ஹாட்டன்) பயின்றார் மற்றும் நியூயார்க் நகரக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். அவர் கனடாவின் கியூபெக்கிலுள்ள மான்ட்ரியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் படித்தார், அங்கு அவர் 1964 இல் எம்.ஏ பட்டமும், 1967 இல் உளவியலில் பி.எச்.டி பட்டமும் பெற்றார்.
பணிகள்:-
நியூயார்க்
நரம்பணுவியல் அறிஞரும் பேராசிரியரும் ஆன இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் புலன்சார் நரம்பணுவியல் மற்றும் உடற்கூறு துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆராய்ச்சிகள்:-
மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்தார்.
விருதுகள்:-
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (2014),
காவ்லி பரிசு (2014),
உடலியல் சமூகம் ஆண்டு மதிப்பாய்வு பரிசு விரிவுரை (2016)


No comments: