Breaking

நவம்பர்-19. இன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசை, நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் வரிசை கண்டறிந்தவர்- ஃபிரெட்ரிக் சேங்கர் (Frederick Sanger)மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:-நவம்பர்-19.


இன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசை, 
நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் வரிசை
கண்டறிந்தவர்-
ஃபிரெட்ரிக் சேங்கர் (Frederick Sanger)மறைந்த தினம்.


பிறப்பு:-

இங்கிலாந்தில் 
ரெண்ட்காம்ப் நகரில்
குளொஸ்டர்சயர்  கிராமத்தில், ஆகஸ்ட்-13, 1918 ஆம் ஆண்டு  பிறந்தார்.  தனது ஆரம்ப கல்வியை வீட்டிலேயே கற்றார்.
பிறகு 1927 இல் டவுன் ஸ்கூலிலும், 1932 இல்  பிரையன்ஸ் டன் பள்ளியிலும் பயின்றார். 

மேலும்  அறிவியலில் அதிக ஆர்வம் இருந்ததால் 
1936-ல் கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இயற்கை அறிவியல் பாடங்களைக் கற்றார். இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல் மற்றும் கணிதம் கற்றார்.

பிறகு  இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் இயற்பியலுக்குப் பதிலாக உடலியல் பாடம் பயின்று
இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். 


ஆராய்ச்சிகள்:-

கேம்பிரிட்ஜில், 
1940 அக்டோபரில் என்.டபிள்யு. "பில்" Pirie கீழ் புல் இருந்து சமையல்  புரதம்
(Edible Protein) பெற முடியும் என்ற ஆராய்ச்சி செய்து  ஆராய்ந்தார்.
பின்னர் அதற்குப் பதிலாக லைசின் (lysine) வளர்ச்சிதை மாற்றம் குறித்து ஆராய்ந்து, ‘அமினோ ஆசிட் லைசின் இன் தி அனிமல் பாடி’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். 

இன்சுலின் மூலக்கூறு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
போவின் இன்சுலினின் இரண்டு பாலிபெப்டைட் சங்கிலிகளின் முழுமையான அமினோ அமில வரிசைகளை மேப்பிங் செய்தார். இன்சுலினின் முழுமையான அமினோ அமில வரிசைகளைக் கண்டறிந்தார். அனைத்துப் புரதங்களும் தனியான வரிசை மற்றும் திட்டவட்டமான ரசாயன கலவைகளைக் கொண்டுள்ளன என்ற முடிவுக்கு வர இது உதவியது.
புரதங்களின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.

நியூக்ளிக் அமிலங்கள் குறித்தும் ஆராய்ந்தார். ஆர்.என்.ஏ.வின் நியூக்ளியோட்டைட் தொடர் வரிசையை இவரும் இவரது சக ஆய்வாளரும் இணைந்து வரிசைப்படுத்தினர். இது ஆர்.என்.ஏ. மூலக்கூறு குறித்த வழியை கொடுத்தது.

மேலும் தனது பேக்ட்ரியோபேஜ் 
( Bactriophage)
ஆய்வுகளுக்கு டி.என்.ஏ. மூலக்கூறுகளை வரிசைப்படுத்துதல் முறையை மேம்படுத்தினார். இது டி.என்.ஏ. வரிசைப்படுத்துதலுக்கான ‘சேங்கர் முறை’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஒற்றை இழை வார்ப்புருக்களிலிருந்து புதிய டிஎன்ஏ போக்குகளை (strands) உருவாக்க கதிரியக்க நியூக்ளியோடைட்களை அறிமுகம் செய்தார்.

1967 இல் சாங்கர் குழுமம், 5 எஸ் ரைபோசோமால் நியூக்கிலியோடைட்  வரிசையை இ.கோலி யிலும் (E. coli), 120 
நியூக்ளியோடைடுகளின் சிறிய ஆர்.என்.ஏ க்களையும் கண்டறிந்தார்கள்.

விருதுகள்:- 

புரதங்களின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக 1958-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு,
1954 இல் ராயல் சொசைட்டி (FRS) உறுப்பினர் பதவி,
வில்லியம் பேட் ஹார்டி பரிசு - 1976,
கோர்டே-மோர்கன் பதக்கம் - 1951,
ராயல் மெடல் - 1969,
Gairdner அறக்கட்டளை சர்வதேச விருது - 1971,
1977-ல் காப்ளே பதக்கம்,
நியுக்ளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததால் 1980-ம் ஆண்டு 2 வது முறையாக வேதியியலுக்கான நோபல் பரிசை வால்டர் கில்பெர்க் என்பவருடன் இணைந்து வென்றார்.


மறைவு:-


உயிரிவேதியியல் அறிஞரும், வேதியியல் துறையில் இரு முறை நோபல் பரிசு பெற்ற இவர், நவம்பர்-19, 2013 ஆம் ஆண்டு,
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.