நவம்பர்-19. உலகக் கழிவறை நாள் (World Toilet Day)
02:45
Read
இன்று:- நவம்பர்-19.
உலகக் கழிவறை நாள்
(World Toilet Day)
ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக்
கழிவறை
வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2013 ஆம் ஆண்டு ஜூலையில் ஐக்கிய நாடுகள்
பொதுச் சபை நவம்பர்-19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாட தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர்
ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. யுனிசெப் சர்வே யின்படி இந்தியாவில்
தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நிர்மல் பாரத் அபியான்.!
‘நிர்மல் பாரத் அபியான்’ என்னும் திட்டம் மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2022 க்குள் ஊரகப் பகுதிகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி செய்தல் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மத்திய, மாநில அரசாங்கம், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.
சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர், 19அம் நாள் உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டம்:-
நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டி 2019 க்குள் திறந்த வெளி மலங்கழித்தலை முற்றிலும் ஒழித்திட இந்திய அரசாங்கம் பாடுபடுகிறது. எனவே குடிமக்களாகிய நாமும் அதன் அவசியத்தை பரப்புவோம்..
நவம்பர்-19. உலகக் கழிவறை நாள் (World Toilet Day)
Reviewed by JAYASEELAN.K
on
02:45
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
02:45
Rating: 5
Tags :
Special Day


No comments: