Breaking

நவம்பர்-20. அனைத்துலக குழந்தைகள் நாள் (UNIVERSAL CHILDREN'S DAY)


இன்று:- நவம்பர்-20.

அனைத்துலக குழந்தைகள் நாள்
(UNIVERSAL CHILDREN'S DAY)

குழந்தைகள் தின விழாவானது 
1856 ஆம் 
ஆண்டு சூன்,
ஞாயிறு  அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். 
அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். 
தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் நாள் என்று மாற்றப்பட்டது.

அனைத்துலக குழந்தைகள் நாள்:-

அனைத்துலக குழந்தைகள் நாள் டிசம்பர்- 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் 
அமைப்புகள் ஆண்டு தோறும் 
நவம்பர்- 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

குழந்தைகள் தினத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், உலகின் பல்வேறு எழுத்தாளர்களின் 200 சிறுகதைகள் இன்று வெளியிடப்படுகிறது.

'குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்பு உணர்வு மற்றும் அவர்களின் நலன்களை காப்பதற்காக' சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Powered by Blogger.