Breaking

நவம்பர்-23. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கூறிவயவர்- கிராஸ்கோகிராப்,வானொலி மில்லிமீட்டர் அலைகள் பற்றி ஆய்வு செய்த இந்திய அறிவியலாளர்- ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-23.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கூறிவயவர்-
கிராஸ்கோகிராப்,வானொலி
மில்லிமீட்டர் அலைகள் பற்றி ஆய்வு
செய்த இந்திய அறிவியலாளர்- ஜகதீஷ் சந்திர போஸ் 
(Jagadish Chandra Bose)
மறைந்த தினம்.

பிறப்பு:-

1859 ஆம் ஆண்டு நவம்பர்- 30 ஆம் தேதி, பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்ட மைமென்சிங் ஊரில் பிறந்தார். தனது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் தமது கல்வியைக் 
கொல்கத்தாவில் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜியில்  1884 ஆம் ஆண்டு தனது கல்வியை நிறைவு செய்தார்.
லண்டனில் இருக்கும்போது  தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்.  பி.எஸ்சி இல் அறிவியலும், மருத்துவமும் படித்து வந்தார். இந்நிலையில் லண்டனில் லார்ட் ரிலே (Lore Rele) என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டினார்.

பணிகள்:-

கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
தனது சொந்த செலவில் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.

கண்டுபிடிப்புகள்:-

இவர் ரேடியோ அலைகளில் மிகுதியும் ஆய்வு நடத்தினார். 
22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை (electromagnetic waves) உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித் (quasi-optical) தன்மைகளைக் கண்டறியக்கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார். அனைத்து வகையான தூண்டல்களுக்குமான (stimuli) பொதுவான மின் துலங்கல்களையும் (responses) கண்டறிந்தார்.
மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் எந்திரத்தை  வடிவமைத்தார். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory)  உருவாக்கினார். கணிப்பொறி
அறிவியலின் ஆரம்ப கால ஆய்வாளர்களில் ஒருவர்.

நூல்கள்:-

உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living)-
(1902),
தாவரங்களின் நரம்புச் செயலமைப்பு (The Nervous Mechanism of Plants)-(1926)
ஆகும்.

தாவரங்களில் ஆராய்ச்சி:- கிரைஸோ கிராப்:-

இவரின் நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது. தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் விளக்கினார்.
1915 ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன” என்பதைப்  சொற்பொழிவு நிகழ்த்தினார். தாமே வடிவமைத்துத் தயாரித்த இந்தியக் கருவிகளின் துணை கொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார். 
தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார்.



விருதுகள்:-

இந்திய சாம்ராஜ்ஜியத்தின் ஆர்டர்(CIE) -(1903),
இந்தியாவின் ஸ்டார் ஆப் ஆர்டர்(CSI)- (1911),
நைட் பேகலர்- (1917),
1920ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றார்.


இறப்பு:-


கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த இவர்,
நவம்பர்-23, 1937 ஆம் ஆண்டு 
கிரிதிஹா, வங்காளத்தில் மரணமடைந்தார்.


சிறப்புகள்:-

உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. 

2004 ஆம் ஆண்டில், போஸ் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பெங்காலி என்ற பிபிசியின் கருத்துக்கணிப்பில் 7 வது இடத்தைப் பிடித்தார்.

No comments:

Powered by Blogger.