உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள் காரணம் 1.
உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?
5 ஆச்சரிய காரணங்கள்
காரணம் 1.
குடல் நுண்ணியிரிகள் :
இரட்டையர்களான கில்லியன் மற்றும் ஜாக்கி ஆகியோரில் ஒருவர் மற்றொருவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பிரிட்டனின் இரட்டையர்கள் ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.
அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கிய காரணம் என நம்புகிறார் அவர்.
''ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உடலில் உள்ள நூறு ட்ரில்லியன் நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை'' என அவர் தெரிவித்தார்.
இவரிடமிருந்து மலத்தை மாதிரியாக பெற்று அவர் ஆராய்ந்தார். அதில் இருவரில் மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில இனங்களே வாழ்கின்றன.
'' பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையை கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்திலிருக்காது'' என்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர். இதே மாதிரியான பாங்கை அவர் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப்பேராசிரியர்.
ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட டயட் கடைபிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும்.
No comments: