Breaking

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?* 5 ஆச்சரிய காரணங்கள் காரணம் 2

உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?*
5 ஆச்சரிய காரணங்கள்
காரணம் 2

மரபணு
மக்களில் சிலர் விடாமுயற்சியுடன் டயட்டை தொடருகிறார்கள் மேலும் உடற்பயிற்சியும் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை அதேவேளையில் சிலர் வெகு சில உடற்பயிற்சிகள் செய்து, விரும்பிய உணவையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே. அது ஏன்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடல் எடை விவகாரத்தில் 40 -70% சதவீதம் சந்ததி வாயிலாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது என நம்புகின்றனர்.
'' மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையது என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை வர வைக்க போதுமானதாக இருக்கலாம்'' என்கிறார் பேராசிரியர் சதாஃ ப் ஃபரூக்கி
குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வை பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ன விரும்புகிறார்? என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்? என்பதில் மரபணுக்கள் பங்காற்றுகின்றன. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம் மேலும் எப்படி நமது உடல் கொழுப்பை கையாளுகிறது என்பன போன்றவற்றிலும் மரபணுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் MC4R மரபணுவும் முக்கியமான ஒன்று.
இந்த MC4R மரபணுவை பொறுத்தவரையில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
'' நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை ஏறுவதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களை செய்துகொள்ள உதவலாம்'' என்கிறார் பேராசிரியர் ஃபரூக்கி.

No comments:

Powered by Blogger.