நாம் முகத்துக்குப் பூசும் முகப்பூச்சு பவுடர் பற்றி அறிவோமா..
நாம் முகத்துக்குப் பூசும் முகப்பூச்சு பவுடர் பற்றி அறிவோமா..
Talc எனப்படுவது, நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சிலிக்கேட் என்ற வேதிப்பெயர் கொண்டதொரு மென்மையான கனிமம்.
இது படிவுப்பாறை வகையை சேர்ந்த பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமம்.
இதன் அமைப்பு ஒன்றின் மீது ஒன்றாக நழுவும் தாள்களைப் போல் இருப்பதால், இதன் மென்மைத்தன்மைக்கு காரணமாகிறது.
இதன் வேதி வாய்ப்பாடு H₂Mg₃(SiO₃)₄ ஆகும். இது உயர்ரக வழுவழுப்பான தாள்கள் செய்தல், ரப்பர் தயாரித்தல், வழுவழுப்பான தரைகள் அமைக்க பயன்படும் செராமிக் ஓடுகள், ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது.
உயர் வெப்ப நிலைகளில் இயங்கும் இயந்திரங்களில் எண்ணெய்களை உயவுப்பொருளாக பயன்படுத்த இயலாது. எனவே, அந்த சூழ்நிலைகளில், இது உயவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

பொருட்களின் கடினத்தன்மை மோ அளவீட்டில் அளக்கப்படும். மோ அளவீட்டில் வைரம் அதிகபட்ச கடினத்தன்மையான 10 ஐ கொண்டிருக்க டால்க்கின் மோ அளவு 1. எனவே, அதன் மென்மைத்தன்மையை அறியலாம்.
டால்க் கனிமத்துடன் பல்வேறு தனிமங்கள், சேர்மங்கள் இணைந்து கிடைக்கும். அவ்வகையில் அக்கனிமத்துடன் ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார் இணைந்திருக்க, அது ஒப்பனை பொருட்களில் பயன்படுத்தப்படுமானால், அந்த ஒப்பனை பொருள் புற்றுநோயை விளைவிக்கும். ஏனெனில், கல்நார் புற்றுநோய்க் காரணியாகும்.
முடிந்த வரை இவ்வகை வாசனை மாவுகளை தவிர்த்தல் நலம். குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை அறவே தவிர்ப்பது நல்லது.
No comments: