மரவள்ளி கிழங்குகளில் உள்ள ஆபத்தைப் பற்றி அறிவோமா..
மரவள்ளி கிழங்குகளில் உள்ள ஆபத்தைப் பற்றி அறிவோமா..
மரவள்ளிக் கிழங்கில் இருவகையுண்டு. ஒன்று கசப்பானது; மற்றது சாதாரணவகை (சற்றே இனிப்பானது). ஆனால் இவை இரண்டுமே லினமாரின், லொடோவஸ்றலின் என்ற நஞ்சுகளைக் கொண்டுள்ளன. கிழங்கிலுள்ள ஏனய நொதிகள் இவற்றுடன் சம்பந்தப்படும்போது இரண்டுமே ஹைட்ரொசயனிக் அமிலம் என்ற நஞ்சாக மாறுகின்றன. ஹைட்ரொசயனிக் அமிலம் இரத்தத்திலுள்ள ஹேமோக்லொபினுடன் இலகுவாக இணந்து சயனோ-ஹேமோக்லொபினாக மாறுகிறது. இதனால் உடலின் பகுதிகளுக்கு ஒக்சிஜன் கொண்டு செல்லும் இரத்தத்தின் பணி தடைப்படுகிறது. இதுவே அந்த நஞ்சூட்டலாகும்.
இந்த நஞ்சானது கால்நடைகள், மனிதர் ஆகிய இருசாரருக்குமே ஆபத்தானது.
சாதாரணமாக மரவள்ளிகிழங்கிலுள்ள இந்த நஞ்சின் அளவு ஒரு கிலோகிராம் கிழங்கில் 3 தொடக்கம் 15 கிராம்கள் என்ற அளவிற்க்காணப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 5 கிராம்கள் என்ற அளவு வரையில் ஆபத்து ஏதுமில்லை. 5 கிராம்களுக்கு மேல் என்றால் தொந்திரவானது 10 கிராம்கள் அல்லது மேலாக உள்ளது என்றால் நிச்சயமாக அது உடலில் நஞ்சைப் பரவ வைக்கும் ஹைட்ரொசயனிக் அமிலம் விரைவாக நீரிற் கரைவதொன்று பொதுவாக இனிப்புவர்க்கக் கிழங்கில் சமைக்கும்போது நஞ்சு இல்லாமலே போய்விடுகிறது ஆனால் கசப்பு வர்க்கத்தில் புதிதாக உரிக்கப்பட்ட கிழங்கில் ஒவ்வொரு கிலோவுக்கும் 2கிராம் வரை இருக்கத்தான் செய்கிறது. ஹைட்ரொசயனிக் அமிலத்தின் தாக்கம் உண்பவரின் உடல் நிறையையும் பொறுத்தது. 50 கிலொ எடையுள்ள ஒருவருக்கு 1.25 கிலோ கசப்புக் கிழங்கு உடனடியாக நஞ்சாக மாறவல்லது.
ஒருவர் அதனை உட்கொண்டபின் வாந்தி எடுத்தால் அல்லது நிலை தடுமாறினால் அல்லது வாக்குத் தடுமாறினால் அவர் கிழங்கினால் நஞ்சூட்டபட்டு விட்டார் என்று பொருள்
கசப்பான வகையில் இந்த நஞ்சு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்தக் கசப்பான வர்க்கம் பெரும்பாலும் துணி துவைக்கப் பயன்படும் ஸ்டார்ச் செய்ய மட்டுமே பயன்படுகிறது ஹைட்ரொசயனிக் அமிலம் கசப்பான வர்க்கத்தைப் பொறுத்தவரை இந்த்தாவரத்தின் எல்லாப் பகுதிகளிலும் செறிந்துள்ளதெனினும் இனிப்பான வர்க்கத்தைப் பொறுத்த வரையில் கிழங்கின் தோலில் மட்டும் கொஞ்சம் செறிவு கூடவென்றும்; ஏனைய பகுதிகளில் அவ்வளவாக இல்லை. என்றும் கூறுவர்.
பயிரிடப் பயன்படுத்தும் உரத்தில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்போது நஞ்சின் செறிவு அதிகம். அந்த உரத்தில் பொட்டாசியம் இருந்தால் அது நஞ்சின் செறிவைக் குறைக்கிறது. வரட்சியான காலமும் வரட்சியான நிலமும் நஞ்சின் செறிவக்கூட்டுகின்றன.
ஈரப்பிடிப்பான நிலம் தாவரத்திலுள்ள நஞ்சின் செறிவைக்குறைக்கிறது. இதனாற் தான் கோடைகாலத்தில் மரவள்ளிகிழங்குப் பயிரில் நஞ்சு பிடிப்பது கூட என்று விவசாயிகள் சொல்வது வழக்கிலுள்ளது
கிழங்கை கிறேற்பண்ணி (Grating) கழுவும்போது நஞ்சானது கரைந்து போய்விடுகிறது.
துண்டுகளாக்கி நீரிற்போட்டு 57 பாகை C வரையில் சூடாக்கினலும் சூரிய ஒளியில் வைத்தாலும் அந்த நஞ்சு இல்லாமல் போய்விடுகிறது.
எதற்கும் இனிப்பான வர்க்கத்தையே வாங்கிச் சமையல் செய்தால் இந்த மாதிரியான சந்தேகங்கள் இலகுவாகத் தீர்க்கப்படும்
ஹைட்ரொசயனிக் அமிலம் முன்னை நாட்களில் பிறஸ்ஸிக் அமிலம் என்றும் அறியப்பட்டிருந்தது.
நீங்கள் எங்கேயாவது மரவள்ளிக்கிழங்கில் பிறஸ்ஸிக் அமிலம் என்ற நஞ்சு உண்டென்று வாசித்திருந்தால் அது இன்னொரு புதுப்பொருள் அல்ல மாறாக அது ஹைட்ரொசயனிக் அமிலமே தான்!
No comments: