Breaking

ஒருவர் இறந்த பிறகு, கை கால்களை கட்டுவது ஏன் என்று தெரியுமா..

ஒருவர் இறந்த பிறகு, கை கால்களை கட்டுவது ஏன் என்று தெரியுமா..

உயிர் பிரிந்துவிட்டது என்று பொதுவாகச் சொல்வது உடலின் இயல்பான இயக்கம் நின்றுவிட்டது என்பதையே குறிக்கின்றது. 

ஆனால் ஒரு உயிருக்கும், குறிப்பிட்ட பிறவியில் அதன் கொள்கலனாக இருந்த உடலுக்கும் உள்ள தொடர்பு முற்றிலுமாக அறுபடுவதற்குப் பதிமூன்று முதல் பதினான்கு நாட்கள் ஆகும். 

இதன் அடிப்படைக் காரணம், உடலில் உள்ள வாயுக்கள் ஒரே சமயத்தில் வெளிச்சென்று விடுவதில்லை என்பதே. 

மரணம் நிகழ்ந்துவிட்டது என்பது பிராண வாயுவின் இயக்கம் நின்றுவிட்டது என்பதை மட்டுமே குறிக்கின்றது. 

இதனால்தான் மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டதைத் தீர்மானிக்க மூக்கின் முன் கைவைத்து சுவாசம் நிகழ்கின்றதா என்று பரிசோதிப்பதும், நாடித்துடிப்பு இருக்கின்றதா என்பதைக் கழுத்திலோ, மாணிக்கட்டிலோ கைவைத்துப் பரிசோதிப்பதும் கடைப்பிடிக்கப் படுகின்றது. 

ஆனால், பிராண வாயு என்பது உடலின் இயக்கத்திற்கு ஆதாரமான ஒரு வாயு மட்டுமே. 

பிராண வாயு வெளியேறிய உடன் இந்த இயக்கம் தடைப்பட்டு விடுகின்றது என்றாலும், பிற வாயுக்களும் நீங்கிய பிறகே உயிர் முற்றிலுமாகப் பிரிந்தது என்ற உண்மையை நமது முன்னோர் அனுபவ பூர்வமாக அறிந்திருந்தனர். அது நிகழப் பல நாட்களாகும். ஆனால் அதுவரை உடலைப் பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை (அக்காலத்தில் குளிர்சாதனப் பிரேதப் பெட்டி கிடையாது). எனவே பிராணவாயுவின் இயக்கம் நின்ற சிலமணி நேரத்திற்குள் உடலை முறைப்படி எரித்துவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது. 

அதற்கு முன்பாக உடனடியாகச் செய்ய வேண்டியது, உயிரானது மீண்டும் அவ்வுடலுக்குள் புக முயற்சிப்பதைத் தவிர்ப்பது. உடலுக்கு நவ துவாரங்கள் எனும் ஒன்பது துளைகள் உள்ளன. 

அவற்றில் சூக்ஷ்மமான உயிர் புகுவதற்கு ஏதுவான துளைகளை உடனடியாக அடைப்பது இதற்காகவே.

கண்களை மூடுவது, காதுகளை அடைப்பது, வாய் மற்றும் கால்களைக் கட்டுவது ஆகிய செயல்கள் அந்தத் துவாரங்களை அடைப்பதற்கே. 


உடல் என்பது உயிருக்கான கொள்கலன் போன்றது. அக்கலன் இல்லாமல் உயிரால் செயல்புரிய முடியாது. எனவே உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தனது கலனாகிய உடலுக்குள் மீண்டும் புகுவதற்கு இயல்பாகவே முயற்சிக்கும். 

உயிர் உடலைப் பிரிந்ததற்கான காரணமே அந்தக் கொள்கலன் ஏதோ ஒரு காரணத்தால் உயிரைத் தன்னுள் கொண்டிருக்கும் திறனை இழந்துவிட்டதே என்பதை உயிர் அறியாது. 

ஆகவே அவ்வுயிரானது மீண்டும் (இறந்துவிட்ட / பயனிழந்துவிட்ட) அவ்வுடலுக்குள் புகுவது பயனற்ற செயல். 

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அர்த்தமுள்ள செயல்பாடுகளே. இந்தப் புரிதலுடன் நாம் சனாதன தர்மத்திலுள்ள கோட்பாடுகளைக் கடைபிடித்தால், இருக்கும்போதும், இறந்தபோதும் நிகழ வேண்டியவை சீராக நிகழும் என்பது திண்ணம்.

No comments:

Powered by Blogger.