Breaking

செப்சிஸ் என்ற நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா..

செப்சிஸ் என்ற நோய்  பற்றி உங்களுக்கு தெரியுமா..


நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

நம்முடைய உடலில் உண்டாகின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் நம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவது தான்.

நோயெதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

 வெறுமனே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுமட்டுமே உண்மையான காரணமல்ல. நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

செப்சிஸ் என்பது இன்றைக்கு நேற்றைக்கு ஏதோ புதிதாக முளைத்திருக்கிற பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்க்குறியை முதன்முதலாக, 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தான் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த செப்சிஸ் என்னும் சொல்லானது கிரேக்கத்தில் இருந்து விலங்குகளின் சிதைவால் ஏற்பட்டது என்ற பொருளில் இருந்து வருவிக்கப்பட்டுள்ளது.
கி.மு 400க்கு முன்பாகவே ஹிப்போகிரேட்டஸ் இந்த செப்சிஸ் என்னும் நோய்க்குறியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2500 ஆண்டுகளாகவே இந்த சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இந்த சொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.


செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பது ரத்தத்தில் கலக்கும் பாக்டீரியா கிருமி தொற்றாகும். பாக்டீரியா தொற்றுக்கள் பல வகையுண்டு. இதில் மிகவும் ஆபத்தான ஒன்று தான் செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பதாகும். இந்த பாக்டீரியா சாதாரணமாக உடலில் இருப்பதை விடவும் ரத்தத்தில் கலக்கும் போது அது அதிகமாகப் பெருகிக் கொண்டே போகும்.


செப்சிஸ் பாக்டீரியா உடலில் சென்று ரத்தத்தில் கலந்து பெருகிக் கொண்டே போகும்போது, உடலில் வீக்கம் ஏற்பட்டு, உடலின் சராசரி ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே போகும்.
செப்சிஸ் என்னும் செப்டிசீமியா சிறுநீரகப் பாதை மற்றும் நுரையீரல் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக அளவில் காய்ச்சல் ஏற்படும்.


சிகிச்சை முறைகள்
இந்த பாக்டீரியாவின் தாக்கத்தைக் குறைக்க வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த பாக்டீரியாவின் மூலமாக ஏற்படுகின்ற ரத்த அழுத்தக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு திரவ வடிவில் மருந்துகள் செலுத்தி, கையில் ஊசி மூலம் செலுத்தப்படும்.
இந்த பாக்டீரியாத் தாக்கத்தால் மூச்சுத் திணறல் கூடு ஏற்படும். அந்த மூச்சுத்திணறலை சரிசெய்ய வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். இந்த பாக்டீரியா தாக்கத்தின் தொடக்க கால அறிகுறியே கட்டுப்படுத்த முடியாத அளவு காய்ச்சல் ஏற்படுவது தான்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கூட இந்த செப்சிஸ் பாக்டீரியா ரத்தத்தில் பரவியதால் தான் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் குறிப்பட்டு இருக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.