Breaking

காலையில் எழும்பொழுது உடல் வலிகளுடன் இருக்க காரணம் பற்றி தெரிந்து கொள்வோம்

காலையில் எழும்பொழுது உடல் வலிக்கிறதென்றால் இரண்டு முக்கியமான காரணங்களில் ஒன்றுதான்.

நீங்கள் ஆழ்ந்து உறங்கவில்லை.

நீங்கள் சரியான முறையில் உடலை வைத்து உறங்கவில்லை.

ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

நீண்ட நேரம் உறங்குவது ஆழ்ந்த உறக்கம் ஆகுமா? இல்லை.
நீங்கள் உங்களையும் இந்த உலகத்தையும் மறந்து உறங்க வேண்டும். 
உங்கள் உறக்கத்தை கனவு கூட கலைத்துவிடக்கூடாது.
நீங்கள் உறங்கி எழுந்தவுடன் புதுப்பொலிவுடன் புத்துணர்ச்சியும் பெற்று காணப்பட வேண்டும். இதுவே சிறந்த மற்றும் தரமான உறக்கமாகும்.


நீங்கள் உறங்கி எழுந்தவுடன் நாள் முழுவதும் எறும்பைப் போல் சுறுசுறுப்புடன் செயல்படவேண்டும்.

உறக்கம் என்பதும் உடல்நலப் பயிற்சியே..

தூக்கம் என்பதை நாம் பெரும்பாலும் தேவையான ஓய்வு என்பதாக மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் ஒரு நாள் தூங்கவில்லை என்றால் பரவாயில்லை எனும் தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறோம்.

உடலியல் ரீதியாக உடல் தனக்குத் தேவையான ஓய்வினைப் பெறவும்; அந்த ஓய்வு நேரத்தின்போது பல தயாரிப்புப் பணிகளில் நம் மூளை ஈடுபடவுமே, இயற்கையாக நமக்கு அளிக்கப்பட்ட வரம்தான் தூக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது மனித உடலில் இருக்கும் செயல்பாடுகளில், ரத்த ஓட்டம் தொடர்பான, செரிமானம் தொடர்பான, சுரப்பிகள் தொடர்பான, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான, தசைகளின் இயக்கங்கள் தொடர்பான, நரம்பு மண்டலம் தொடர்பான, சுவாசம் தொடர்பான, எலும்பு அமைப்புகள் தொடர்பான பலவிதமான அங்கங்களின் கூட்டான செயல்பாடுதான் நம் இயக்கத்துக்கும், வாழ்வுக்கும் காரணம்.

தூக்கத்தின் போதுதான் நம் உடலில் அடெநோஸின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate) எனும் வேதிப் பொருள் சுரக்கிறது. இந்த வேதிப் பொருள்தான் நமது பலவிதமான இயக்கங்களுக்குத் தேவையான சக்தியினை நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் வழங்குகிறது.

தூக்கம் என்பது நம் உடலில் சுரக்கும் மெலடோனின் எனும் ரசாயனத்தால் தூண்டப்படும் ஒரு நிலை. அதாவது, கண்ணில் இருக்கும் சில குறிப்பிட்ட செல்கள், சூரியனின் அஸ்தமனத்தை நம் மூளைக்கு சிக்னலாக அனுப்ப, அவை சர்காடியன் ரிதம் எனும் முறைக்கு ஏற்ப மூளைக்கு உணர்த்த, மூளை தன்னிச்சையாக மெலடோனின் எனும் வேதிப் பொருளை சுரந்து அதன்மூலம் தூக்கத்தை வரவழைக்கிறது.

தூங்கத் தொடங்கிய பின்பு, நம் உடலில் உள்பாகங்களின் இயக்கம் தவிர, அதாவது இதயம், நுரையீரல், ஜீரண அமைப்புகள் தவிர, நமது தசை அமைப்பு ஓய்வு கொள்கிறது.

இந்த நேரத்தில்தான் Adenosine triphosphate எனும் வேதிப் பொருள் சுரக்கிறது. இப்படி இயற்கையாக வரும் தூக்கத்தை நாம் துறந்து மூளைக்கு வேலை கொடுப்பதாக நினைத்துக்கொண்டு, படிப்பது எழுதிப் பார்ப்பது, தேர்வுக்குத் தயார் செய்வது என வேலை வாங்கினால், அந்த ரசாயனம் சுரப்பதில் சிக்கல் உருவாகிறது. இதனால், செல்களுக்குத் தேவையான சக்தி முறையாகக் கிடைப்பதில்லை.

இதனால் எதிர்மறை எண்ணங்கள், நமது எண்ணங்களில் ஒருவிதமான சோகம், அலைபாயும் எண்ணங்கள், எதிர்ப்பு சக்தி குறைவு, கோர்வையாகச் சிந்திக்க இயலாமை எனும் அபாயங்கள் உருவாகும்.
நாம் வாசித்த, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என முயன்று கற்றுக்கொண்ட தகவல்கள் எல்லாம் மூளைக்குள் சரியாகப் பதிவாகாமல் குழப்பம் வரும். முறையாகப் பயிற்சி செய்து கற்றுக்கொண்டவையும் மூளைக்குள் சிதைந்துபோகும் வாய்ப்பும் உண்டு.

No comments:

Powered by Blogger.