Home
DECEMBER
இந்திய அறிவியல் அறிஞர்கள்
ஜனவரி-01. அபோசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல், தத்துவங்களை வழங்கிய இந்திய இயற்பியலாளர்- சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose) பிறந்த தினம்.
ஜனவரி-01. அபோசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல், தத்துவங்களை வழங்கிய இந்திய இயற்பியலாளர்- சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose) பிறந்த தினம்.
23:07
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-01.
அபோசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல்,
தத்துவங்களை வழங்கிய இந்திய இயற்பியலாளர்-
சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜனவரி-01, 1894 ஆம் ஆண்டு
கோல்கத்தா,
இந்தியாவில் பிறந்தார். தனது ஆரம்பகல்வி பயின்று முடித்த பிறகு, நியூ இந்திய பள்ளியிலும், இறுதி ஆண்டில், இந்துப் பள்ளியில் பயின்றார்.
1909 ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு (மெட்ரிக்லேஷன்) தேர்ச்சி பெற்றார். பிறகு கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் இடைநிலை அறிவியல் பாடத்தில் சேர்ந்து பயின்றார்.
அங்கு அவரது ஆசிரியர்கள் ஜகதீஷ் சந்திர போஸ், சாரதா பிரசன்னா தாஸ் மற்றும் பிரபுல்லா சந்திரா ஆகியோர் இருந்தனர். தனது B.Sc., யில் கலப்பு (பயன்பாடு) கணிதத்தை படித்து, 1913 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். மேலும் 1915 ஆம் ஆண்டில் M.Sc., கலப்பு கணிதம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
பணிகள்:-
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1916 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி அறிஞராக இணைந்து சார்பியல் கோட்பாட்டில் தனது ஆய்வு தொடங்கினார்.
1916 இல் சத்யேந்திரநாத் அறிவியல் பல்கலைக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
பிறகு ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மேடம் கியூரி ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து இயற்பியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
1924 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் இடத்துக்கு தகுதி வாய்ந்த ஆனால் டாக்டர் பட்டம் பெறாத இவர், ஐன்ஸ்டீன் சிபாரிசில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தார்.
செர்மன் கற்றல்:-
ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் சத்யேந்திரநாத்தும் சாகாவும் பெற்றார்கள். அந்த கட்டுரை ஜெர்மன் மொழியில் இருந்தததால் தானும் கற்று, சாகாவிற்கும் ஜெர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர். பிறகு அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். 1924 இல் மாக்ஸ் பிளாங்கின் விதி (Max Plank’s Law), ஒளித்துகள் கோட்பாடு (Light Quantum Hypothesis) பற்றியும் கட்டுரை எழுதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதனைப் பாராட்டியதோடு அதை விரிவாக விளக்கி தானே ஜெர்மனியில் மொழிபெயர்த்து ஜெர்மன் இயற்பியல் வெளியீடு என்ற அமைப்புக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டினின் மகத்தான நட்பைப் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங் என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். பிளாங்கின் அந்த வழிமுறையை ஏற்க்காத காரணத்தால்,
அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் 1920 ஆம் ஆண்டு கண்டுபிடித்ததுதான் போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் தத்துவம் ஆகும்.
கட்டுரை:-
மேகநாத் ஸஹாவுடன் இணைந்து ‘ஈக்வேஷன் ஆஃப் ஸ்டேட்’ என்னும் இயற்பியல் கோட்பாட்டுக் கட்டுரையை வெளியிட்டனர்.
விருதுகள்:-
பத்ம விபூசன் விருது இந்திய அரசால் 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் ராயல் சொசைடியின் ஃபெலோஷிப் கவுரவமும் பெற்றார். ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.
மறைவு:-
இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் மேதையான
இவர்,பிப்ரவரி-04, 1974 ஆம் ஆண்டு,
கோல்கத்தா, இந்தியாவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
ஜனவரி-01. அபோசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல், தத்துவங்களை வழங்கிய இந்திய இயற்பியலாளர்- சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:07
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:07
Rating: 5


No comments: