Home
JANUARY
ஜனவரி-01. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்- சர் எட்வின் லான்சீர் லட்யன்ஸ் (Sir Edwin Landseer Lutyens) மறைந்த தினம்.
ஜனவரி-01. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்- சர் எட்வின் லான்சீர் லட்யன்ஸ் (Sir Edwin Landseer Lutyens) மறைந்த தினம்.
23:23
Read
இன்று நினைவு நாள்:- ஜனவரி-01.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்-
சர் எட்வின் லான்சீர் லட்யன்ஸ் (Sir Edwin Landseer Lutyens) மறைந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்து லண்டனில் மார்ச்-29,
1869 ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். பிறகு சவுத் கிங்ஸ்டன் பள்ளியில் பயின்றார். இவர் இளம் வத்திலே படம் வரைவதிலும், கலைப்பொருட்களை உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
ராயல் கலைக் கல்லூரியில் பயின்றார்.
பணிகள்:-
கட்டிடக் கலைஞர்களுக்கான நிறுவனத்தில் தொழில் கற்கும் மாணவராக வேலை பார்த்தார். பின்னர் தனிப்பட்ட முறையில் தொழிலைத் தொடங்கினார்.
கட்டடக்கலை:-
முதன் முதலில் சிறிய தனியார் பள்ளியைக் கட்டியதால் இது பலரையும் கவர்ந்தது. மேலும் பாரம்பரிய முறைகளைத் தனது பாணிக்கேற்ப மாற்றி அதைப் பின்பற்றிவந்தார். பின்னர், பிரபல வடிவமைப்பாளரான கெட்ரூட் ஜேக்கல் எளிமையான, தெளிவான, குறிக்கோள் சார்ந்த அணுகுமுறையை இவருக்குக் கற்பித்தார். இவர்கள் இருவரும் இணைந்து வடிவமைத்த பல கட்டிடங்கள் வரவேற்பை பெற்றன.
மன்ஸ்டெட் வுட், கொடால்மிங், சர்ரே ஆகிய இடங்களில் இவர் வடிவமைத்த கட்டிடங்கள் இவரது தனித்துவத்தை வெளிப்படுத்தின.
இந்தியாவின் புதிய தலைநகராக புதுடெல்லியை வடிவமைப்பதற்கான அணியின் ஆலோசகராக 1912 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுடெல்லியை வடிவமைப்பதிலும், கட்டமைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
டெல்லியில் உள்ள இந்தியா கேட், தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையாக உள்ள வைஸ்ராய் ஹவுஸ் ஆகியவற்றை வடிவமைத்தார்.
ஐரோப்பிய, இந்திய கட்டிடக் கலை பாணியை இணைத்து பல கட்டிடங்களை வடிவமைத்தார்.
டேவனில் கேஸ்டில் டிராகோ, எண்ணற்ற தேவாலயங்கள், அலுவலகக் கட்டிடங்கள், கல்லறைகள், நினைவு மண்டபங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். மேலும் இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான கட்டிடங்களை
வடிவமைத்துள்ளார்.
சிறந்த கட்டிடங்கள்:-
ஹைதராபாத் ஹவுஸ், பரோடா மன்னருக்காக பரோடா ஹவுஸ், பட்டியாலா ஹவுஸ், ஞான்பத், ராஜ்பத் சாலைகள் போன்றவை புகழ்பெற்றவையாகும்.
விருதுகள்:-
1918 ஆம் ஆண்டு சர் பட்டம் பெற்றார்.
இம்பீரியல் வார் கிரேவாஸ் கமிஷனில் கட்டிடக் கலைஞராகப் பதவி ஏற்றார்.
மறைவு:-
கட்டிடக் கலை வரலாற்றிலேயே அதிக அளவிலான கட்டிடங்கள், நினைவு மண்டபங்களைக் கட்டிய இவர், ஜனவரி-01,1944 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியா டெல்லியின் ஒரு பகுதி ‘லட்யன்ஸ் டெல்லி’ என்று அழைக்கப்படுகிறது.
ஜனவரி-01. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்- சர் எட்வின் லான்சீர் லட்யன்ஸ் (Sir Edwin Landseer Lutyens) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:23
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:23
Rating: 5
Tags :
JANUARY


No comments: