Home
DECEMBER
டிசம்பர்:-04. ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை இணைந்து கண்டுபிடித்த இந்திய இயற்பியலாளர்- சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) பிறந்த தினம்.
டிசம்பர்:-04. ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை இணைந்து கண்டுபிடித்த இந்திய இயற்பியலாளர்- சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) பிறந்த தினம்.
02:08
Read
இன்று பிறந்த நாள்:- டிசம்பர்:-04.
ஒளிச்சிதறல் விளைவுகளில்
இராமன் விளைவை
இணைந்து கண்டுபிடித்த இந்திய இயற்பியலாளர்-
சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) பிறந்த தினம்.
பிறப்பு:-
தமிழ்நாட்டில்,
விருதுநகர் மாவட்டத்தில்,
வத்திராயிருப்பு
(Watrap) அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் டிசம்பர்-04, 1898 ஆம் ஆண்டு பிறந்தார்.
தனது சொந்த ஊரில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பின்னர், மதுரையில் உள்ள அமெரிக்க கல்லூரி மற்றும் சென்னை மாகாணத்திலுள்ள கிரிஸ்துவர் கல்லூரியில் பயின்றார். அங்கேய இயற்பியல் பட்டம் பெற்றார்.
ஆராய்ச்சிகள்:-
டாக்டர் கிருஷ்ணன் இந்திய இயற்பியலாளராக 1920 ஆம் ஆண்டு முதல் சி.வி. ராமனுடன் சேர்ந்தார்.
ஒளி சிதறல் பரிசோதனை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.
ராமன் விளைவு கண்டுபிடிப்பில் இவரும் உறுதுணையாக இருந்து பங்களிப்பு செய்தது மகத்தானதாக ஆகும்.
இயற்பியல் துறை பேராசிரியர் என்ற முறையில், அவர் 1928 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் டாக்கா பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றார். அங்கே அவர் கட்டமைப்பு தொடர்பாக படிகங்களின் காந்த பண்புகளை பற்றி ஆய்வு செய்தார். பிறகு
காந்தப்பண்பு சீர்மாறுகை
(Magnetic anisotropy) கண்டுபிடித்தார். லண்டனின் ராயல் சொசைட்டி அவர்களின் கண்டுபிடிப்பு 1933 ஆம் ஆண்டில்
காந்தப்பண்பு சீர்மாறுகை (Magnetic anisotropy) செயல்பாடு என்ற பெயரில் ஆய்வுகளை வெளியிட்டது.
நூல்கள்:-
ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.
கட்டுரைகள்:-
நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம்.
பூமியின் வயது என்ன.
சூரிய சக்தி.
உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன்.
பதவிகள்:-
சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.
தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.
சுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்.
விருதுகள்:-
1940 இல் பிரித்தானியாவில்
உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார்.
1954ஆம் ஆண்டும் இந்தியாவின்
பத்ம பூசன் விருது பெற்றார்.
1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.
இறப்பு:-
அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாக்கிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் பங்காற்றிய இவர், ஜூன்-14, 1961ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவரை பெருமைப்படுத்தும் விதமாக
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
டிசம்பர்:-04. ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை இணைந்து கண்டுபிடித்த இந்திய இயற்பியலாளர்- சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
02:08
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
02:08
Rating: 5
Tags :
DECEMBER


No comments: