Breaking

டிசம்பர்-04. மின்காந்தம், மின்னியக்கியை கண்டுபிடித்த ஆங்கிலேய இயற்பியலாளர்- வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon) மறைந்த தினம்.




இன்று நினைவு நாள்:- டிசம்பர்-04.

மின்காந்தம், மின்னியக்கியை கண்டுபிடித்த
ஆங்கிலேய இயற்பியலாளர்-
வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon) மறைந்த தினம்.

பிறப்பு:-

மே-22, 1783 ஆம் ஆண்டு
விட்டிங்டன், லங்காசயர், 
இங்கிலாந்தில் பிறந்தார்.
1802 ல்  இராணுவத்தில் சேர்ந்தார். மேலும் கணிதமும் இயற்பியலும் கற்றுக் கொண்டார்.

பணிகள்:-

1824 ஆம் ஆண்டில் அவர் சர்டி, ஆடிஸ்மாகம்பே, கிழக்கு இந்திய கம்பெனிஸ் இராணுவ செமினரியில் அறிவியல் மற்றும் மெய்யியலில் விரிவுரையாளராக பணிபுரிந்தார்.
1840 ஆம் ஆண்டில் அவர் மான்செஸ்டரில் நடைமுறை அறிவியல் ராயல் விக்டோரியா தொகுப்பு கண்காணிப்பாளராக ஆனார். 

கண்டுபிடிப்புகள்:-

இவர் முதன் முதலில் மின்காந்தங்களைக் கண்டுபிடித்தார்.அது ஒரே ஒரு மின்கலத்தில் 4 கி.கி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை 
மின்சார இயக்கியைக்
கண்டுபிடித்தார். 1832 இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின் திரட்டியையும் உருவாக்கினார். 
1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோ
மீட்டரைக் கண்டறிந்தார்.

இறப்பு:-

டிசம்பர்-04, 1850 ஆம் ஆண்டு
பிரெஸ்ட்விச், லங்காசயரில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.