Breaking

டிசம்பர்-05. குவாண்டம் பொறிமுறையை தோற்றுவித்த ஜெர்மானிய இயற்பியலாளர்- வெர்னர் ஹைசன்பர்க் (Werner Heisenberg) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-05.

குவாண்டம் பொறிமுறையை தோற்றுவித்த
 ஜெர்மானிய இயற்பியலாளர்- வெர்னர் ஹைசன்பர்க் (Werner Heisenberg)

பிறந்த தினம்.

பிறப்பு:-

ஜெர்மனியின் வர்ஸ்பர்க் நகரில்
டிசம்பர்- 05, 1901 
ஆம் ஆண்டு பிறந்தார். தனது கல்வியை
மூனிச் நகரில் உள்ள மாக்ஸ் மில்லன் பள்ளியில் பயின்றார். பிறகு மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். பிறகு   மாக்ஸ் போர்னிடம் இயற்பியல் பயில்வதற்காக, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மூனிச் பல்கலைக்கழகத்தில் நீர் இயக்கவியலில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மாக்ஸ் போர்னின் உதவியாள ராகச் சேர்ந்தார். ராக்ஃபெல்லர் உதவித்தொகை பெற்று கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் இயற்பியல் ஆராய்ச்சி யில் ஈடுபட்டார். 

பணிகள்:-

லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றினார்.
மேலும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர், கெய்சர் வில்ஹெம் இயற்பியல் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றினார். சிறப்பு அழைப்பின்பேரில், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியாவில் உள்ள அறிவியல் அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றினார். 

ஆய்வுகள்:-

குவான்டம் மெக்கானிசத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இக்கோட்பாட்டை பயன்படுத்தி ஹைட்ரஜன் உருவ மாற்று வடிவங்களைக் கண்டறிய முடிந்தது. குவான்டம் புலக்கொள்கை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அணுக்கரு கோட்பாடு குறித்தும் ஆராய்ந்தார்.
நவீன இயற்பியலின் பிரதான கொள்கைகளில் ஒன்றான ஹைசன்பர்க் நிலையில்லா (அன்சர்டைனிட்டி) கோட்பாட்டைக் கண்டறிந்தார். அணிகள் (மாட்ரிக்ஸ்) அடிப்படையில் குவான்டம் இயக்கவியலை உருவாக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். 
கொந்தளிப்பான ஓட்டம் (Turbulent Flows), இணை அணுவியல் துகள்கள், அணு உட்கரு, காந்தவியல், காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவற்றின் நீர் இயக்கவியல் கோட்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். நுண் அலகு இயந்திரவியலின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். ஸீமேன் விளைவு குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். 
1925ல் மாகசு பார்னுடன் இணைந்து சத்திச்சொட்டு நிலையியக்கவியலுக்கான அணி சூத்திரமாக்கலை இயற்றினார். 

பரிசுகள்:-

மேட்டூசி மெடல்- (1929),

விஞ்ஞானத்திற்கு தகுதிவாய்ந்த சேவைக்கான பர்னார்டு பதக்கம்-(1930),
மேக்ஸ் பிளாங்க் பதக்கம்-(1933),
ForMem ஆப் ராயல் சொசைட்டி- (1955), 
 இயற்பியலுக்கான நோபல் பரிசைப் (1932) இல் பெற்றார். 

பதவிகள்:-

ஐசன்பேர்க், நாஸி ஆட்சியின் கீழ் ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின் தலைவராக இருந்தார். 

மறைவு:-

20 ஆம் நூற்றாண்டின் சிறந்த இயற்பியலாளரம், நோபல் பரிசு பெற்று புகழ் பெற்ற இவர்,
பிப்ரவரி- 01, 1976 ஆம் ஆண்டு
மியூனிச், ஜெர்மனியில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.