Breaking

டிசம்பர்-06. அலுமினியம் பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்- சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-06.

அலுமினியம் 
பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்-
சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall)
பிறந்த தினம்.


பிறப்பு:-

டிசம்பர் 06, 1863 ஆம் ஆண்டு,
அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தாம்ப்சன் எனும் ஊரில்  பிறந்தார்.
ஓபெர்லின் நகரில் தனது உயர் கல்வியைத் தொடங்கினார். இசையை ஒரு துணைப்பாடமாக எடுத்துப் படித்தார். 1880-ல் ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து 1885-ல் கலைப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கலைப்பாடத்தில் பட்டம் பெற்ற போதும் அறிவியல் சோதனைகளிலும் ஆய்வுகளிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். 

கண்டுபிடிப்புகள்:-

இவர் தனது ஆய்வுகளுக்கு ஓபெர்லின் கல்லூரியின் ஆய்வகம்,  வீட்டின் பின்புறம் மரத்தால் அமைக்கப்பட்ட அறையை பயன்படுத்தினார். தனது சோதனைகளை

எட்டு ஆண்டுகள் ஓயாது செய்த ஆய்வின் பயனாக, 1886-ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் நாள் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.அலுமினாவை, கிரியோலைட்டில் கரைத்து அதன் வழியே மின்சாரத்தைச் செலுத்தி அலுமினிய உலோகத்தைப் பிரித்தெடுத்தார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமைக்காக 1886-ல் விண்னப்பித்தார்.(காப்புரிமை எண் Patent Number(s) 400,665) ஆகும். இதன் மூலம்
மக்கள் ஆரம்ப காலத்தில் அதிகமாக  இரும்பை பயன்படுத்தினார்கள் அதற்கு மாற்றாக தற்போது பரவலாகப் பயன்பட்டுவரும் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது பற்றிய இவரது கண்டுபிடிப்பு உலோகங்களின் வரலாற்றை மாற்றியமைத்தது.

பணிகள்:-

1888-ல் 'பிட்ஸ்பர்க் ரிடக்சன் நிறுவனத்தைத் தொடங்கி வணிக முறையில் அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. இதனால் அலுமினியம் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. 
இந்நிறுவனம் 1907 முதல் 'அமெரிக்க அலுமினிய நிறுவனம்' (Aluminum Company of America (Alcoa) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

விருதுகள்:-


1911 ஆம் ஆண்டில்,  மிக உயர்ந்த விருதான பெர்கின் பதக்கம் வழங்கப்பட்டது.

மறைவு:-

1914 ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் நாள்
டேடொனா, புளோரிடாவில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

இவரின் நினைவாக
ஓபெர்லின் கல்லூரியில் இவருக்கு அலுமினியத்தாலான சிலையை நிறுவி கிரானைட் கல்லில் பதித்து கல்லூரி நிர்வாகம் சிறப்பு செய்துள்ளது.

No comments:

Powered by Blogger.