Breaking

06.12.2019. வெள்ளி. இன்றைய ராசி பலன்கள்..

                         




💥மேஷம்:-


எதுவும் சரியாக அமையவில்லையே என்ற கவலை வேண்டாம். மீண்டும் சொல்கிறோம். விரைவில் அனைத்தும் மாறும். உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, முதுகு வலியால் அதிகம் சிரமப்படுவீர்கள். கணிசமான முன்னேற்றத்தை விரைவில் காண்பீர்கள்.



💥ரிஷபம்




நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்தது போதும் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் குடும்பமும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டும். கடனில் இருந்து மீண்டு வருவீர்கள். தோல்வி குறித்த பயம் உங்களுக்கு வேண்டாம்.




💥மிதுனம் 


சீரான முன்னேற்றம் இருக்கும். அதற்குள் அவசரப்பட வேண்டாம். உங்கள் வாய்ப்புகள் தட்டிப்பறிக்கப்படாது. ஆனால், இழக்காமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தம்பதிக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம்.


💥கடகம் 



வெற்றி இனி உங்கள் பக்கம் தான். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் அடுத்தடுத்து நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தீர்க்கமாக ஒரு விஷயத்தை முன்னெடுத்தால் கண்டிப்பாக அந்த செயலால் பயனடைவீர்கள். புகழும் பெறுவீர்கள். உடல்நிலையில் லேசான அக்கறை தேவை.


💥சிம்மம்




உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் அனுபவித்து வந்த இன்னல்களில் இருந்து விடுபட தொடங்குவீர்கள். தன்னம்பிக்கை மேலோங்கி காணப்படும்.


💥கன்னி




கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.


💥துலாம்




புரமோஷனுக்கு வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.


💥விருச்சிகம்



சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள். இருப்பினும், வண்டியில் வெளியே செல்லும் போதும், பர்ஸை பாக்கெட்டில் வைக்கும் போதும் கவனம் தேவை.


💥தனுசு



இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.


💥மகரம்


இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.


💥கும்பம்

குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இறைவழிபாடு மற்றும் சிறப்பான திட்டம் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.


💥மீனம்:-

 கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள் போதும். இது உங்களுக்கான நாள் இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா? வீண் விவாதங்கள் வேண்டாம். வாக்குறுதிகள் வேண்டாம். தன்னம்பிக்கையை தாங்கிப் பிடித்திட உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கலாமே.


No comments:

Powered by Blogger.